பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

ஆழ்கடலில்


(C.1.D.) மூலம் துருவித் தேடுகின்றன. ஆனால் அக்காலத் திலோ, குறையைப் போக்கி நலமுண்டாக்க வேண்டும் என்னும் நல்ல நோக்குடன். அரசர்கள் தாங்களே மாறு கோலம் புனைந்து, மக்கள் என்ன குறைபாடு பேசிக்கொள் கின்றனர் என்று துருவித் தேடினர். இந்த நிலை என்றென்றும் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே 'செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்புடை வேந்தன் என்றார்.

மக்கள் சொல்லியும் திருந்தாத மன்னர்களை அன்று அறிஞர்களும் அமைச்சர்களும் இடித்துரைத்தனர். இக்காலத்தில் இடித்துரைத்தாலோ சீட்டுக் கிழிந்துவிடும். பெருஞ்சித்திரனார், பெருந்தலைச் சாத்தனார், வெள்ளைக்குடி நாகனார். கோவூர்கிழார், ஒளவையார் முதலிய பழங்காலப் புலவர்கள் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல்களைப் புரட்டிப் பாருங்கள்! நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகிற அளவுக்கு மன்னர்களை நேரில் தாக்கிப் பேசியுள்ளனர். அம்மன்னர்களும் திருந்தியதாகத் தெரிகிறது. இதுதான் "சொல் பொறுக்கும் பண்பு" ஆகும்.

இந்தக் குறட் கருத்தை இக்கால நிலைக்கு வைத்துப் பார்ப்போம். "உலைவாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது" என்றபடி, மக்கள் ஆட்சியில் மக்கள் எதிர்த்துப் பேசத்தான் செய்வார்கள். மக்கள் பேசாவிடினும், அவர்களுக்குப் பதிலாகச் சென்றிருக்கும் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசாங்கத்தின் குற்றங் குறைகளைச் சுட்டிக்காட்டிக் காது கைக்கப் பேசுவார்கள்தாம். அப்பொழுதுதான் அரசாங்கம் விழிப்புடன் இருக்கும். "தட்டிப் பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்" ஆகிவிடுவானல்லவா? நல்லதொரு கட்சி நாட்டையாள், அதற்கு உரங்கொடுக்க வலுவானதோர் எதிர்க்கட்சி வேண்டும் என்பது இதற்காகவே! இவ்வாறு காது கைக்கப் பேசுபவரைப் பெற்றிருப்பது, அரசாங்கம் திருந்தி மக்களுக்கு