பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
116
ஆழ்கடலில்
 

(பதவுரை) முறைசெய்து = ஒழுங்கான முறையில் ஆட்சி புரிந்து, காப்பாற்றும் மன்னவன் = குடிமக்களைக் காப்பாற்றுகின்ற அரசன், மக்கட்கு இறை = அம்மக்களுக்குக் கடவுள் ஆவான், என்று வைக்கப்படும் = என்று உயர்த்தி வைத்து மதிக்கப் பெறுவான். முறைசெய்தல் - செங்கோலாட்சி புரிதல்; இறை = இறைவன் - கடவுள்.)

(மணக்குடவர் உரை) குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லா வுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன், மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான்.

(பரிமேலழகருரை) தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையுஞ் செய்யுமரசன், பிறப்பான் மகனே யாயினும், செயலான் மக்கட்குக் கடவுளென்று வேறு வைக்கப்படும்.

(விளக்கவுரை) இந்தக் குறளில் "இலைமறைகாய்" ஒன்று ஒளிந்துள்ளது. மேலோடு பார்த்தால் அது தெரியாது. உள்ளே ஏதோ இருக்கிறது என்ற எண்ணத்தோடு நுனித்து நோக்கினால்தான் அது புலப்படும். அது என்னவாய் இருக்கக் கூடும்? அரசனது இலக்கணம் கூறும் பகுதி இது. ஆனால் அதற்குப் பதிலாக ஆண்டவனது இலக்கணம்தான் இந்தக் குறளில் இயம்பப் பெற்றுள்ளது. இதுதான் அந்த இலை மறைகாய். மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்? எதனால்? முறை செய்து காப்பாற்றுவதால்! கடவுளே முறை செய்து உலகைக் காப்பதாகக் கூறுவது வழக்கம். அவரைப்போல மன்னனும் காப்பதால், அவன் மக்களுக்குக் கடவுளாவான்.

இந்தக் கடவுள் தத்துவத்தை ஆசிரியர் திருவள்ளுவர் வேறு எங்கேயும் சொல்லவில்லை; இங்கே தான் குறிப்பிட்டிருக்கிறார். கடவுள் வாழ்த்து' என்னும் பகுதியில் பல குறள்களில், கடவுளை வணங்கினவர் வாழ்வார். என்று