உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

ஆழ்கடலில்


களுக்குப் 'பதினெண் கீழ்க்கணக்கு' என்றும் பெயர், கணக்காயர் என்றால் ஆசிரியர், கண்ணுக்கும் -கணக்குக்கும் - கல்விக்கும் உள்ள உறவை விளக்கவே இவ்வளவு எழுதப்பட்டது.

இந்தக் குறளில் மூன்றிடத்தில் 'என்ப' என்னும் சொல் வந்துள்ளது. எண் என்ப - எழுத்து என்ப என்னும் ஈரிடங்களிலும் 'என்ப' என்பதற்கு 'என்று சொல்லப் படுபவை' என்று பொருளாம். இது அஃறிணைப் பலவின் பால் வினையாலணையும் பெயர் முடிபு. பிறகு 'கண் என்ப' என்ற விடத்தில், 'என்ப' என்பதற்கு, 'என்று சொல்லுவர்' என்று பொருளாம். இது உயர்திணைப் பலர்பால் வினைமுற்று முடிபு. 'எண் என்ப ஏனை எழுத் தென்ப இவ்விரண்டும் கண் என்ப' என்ற தொடரில் எத்தனை இனிமை! எத்தனை அழகு! உண்மையில் கண்ணல்லாத - ஒரு தனி முழுப்பொருளாகிய தன் குழந்தையை நோக்கி, என் கண்ணே, என் கண்மணியே என்று தாயானவள் கொஞ்சிக் கொஞ்சிக் குலவுவதைப் போல, எண் என்றா அதற்குப் பெயர் சொல்வது? எழுத்தென்றா அதற்குப் பெயர் சொல்வது? இரண்டு கண் என்றல்லவா அவற்றை அழைக்கவேண்டும் என்று கொஞ்சிக் கொஞ்சி - குழைந்து குழைந்து வாயூறிப் போகிறார் வள்ளுவர். தாரிபோட்ட பாதையிலே புது வண்டி 'வழ வழ' என்று போவதைப் போல் அமைந்துள்ள இந்தக்குறளை இன்னும் இருமுறை படியுங்கள்! எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு, எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங் கண் ணென்ப வாழு முயிர்க்கு".

இந்தக் குறளிலுள்ள 'என்ப' என்னும் சொல்லின் மூன்றிடங்கட்கும் இதற்கு முன் குறிப்பிட்டுள்ள - முன்னையோர் கூறியுள்ள இலக்கண முடிபுகளை இப்போது