உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அறத்துப்பால்
இல்லறவியல் - வாழ்க்கைத்துணை நலம்
வாழ்க்கைத் துணை நலம்

வாழ்க்கையில் கணவனுக்குத் துணையாக இருக்கின்ற மனைவியின் குணநலங்களைப் பற்றிக்கூறும் பகுதியாதலின், இதற்கு 'வாழ்க்கைத் துணைநலம்' என்னும் பெயர் வழங்கப்பட்டது. கணவனின் கடமைகளைக் கூறும் இல் வாழ்க்கை என்னும் பகுதிக்குப்பின், மனைவியின் மாண்புகளைக் கூறும் இப்பகுதியை அமைத்தது இயைபுடையது தானே!

வாழ்க்கைத்துணை

(தெளிவுரை) குடும்பப் பெண்ணுக்குரிய குணச்சிறப்புடன், கணவனது வருவாய்க்கேற்பச் செலவு செய்பவள் எவளோ அவளே நல்ல வாழ்க்கைத் துணைவியாவாள்.

"மளைத்தக்க மாண்புடைய ளாகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை".

(பதவுரை) மனைத்தக்க மாண்புடையள் ஆ கி = குடும்பத்துக்குத் தகுந்த மாட்சிமை உடையவளாய், தற்கொண்டான் - தன்னை மணந்து கொண்ட கணவனது. வளத் தக்காள் - செல்வ வளப்பத்துக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்பவளே, வாழ்க்கைத்துணை = உண்மையில் வாழ்க்கைக்குத் துணையாவாள். (மனை = மனையறம்- குடும்பம்; மாண்பு = மாட்சிமை - நற்குண நற்செய்கைகள்; தற் கொண்டான் - தன் கொண்டான் = கணவன். வளம் = வந்து கொண்டிருக்கும் செல்வ வளம்),