பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

ஆழ்கடலில்


விடுகின்றனர். ஆண்பிள்ளைகளோ , திருமணம் செய்து வைத்துவிட்டால் அடியோடு மாறிவிடுகின்றனர். அவர்களுக்கு மனைவி என்ன - மாமனார் என்ன - மாமியார் என்ன - மைத்துனர்கள் என்ன - மைத்துனிகள் என்ன - இவர்களே நெஞ்சத்திரையில் நிழற்படம்போல ஓடிக்கொண்டிருக்கின்றனர். இப்படி ஒவ்வொன்றாகப் புடைத்துத் தூற்றிப் பார்த்தால் கடைசியாகத் தேறுவது மனைவி என்னும் ஒரு பொருள் தான். அவன் வாழ்வு அவள் வாழ்வு - அவன் தாழ்வு அவள் தாழ்வு. இன்ப துன்பம் இரண்டிலும் இறுதிவரையும் இணைந்து நிற்பவள் அவளே! நான் இவ்வளவு எழுதியதைக்கொண்டு என்னைப் பெரிய 'பெண்டாட்டி தாசன்' என்று எவரும் எண்ணிவிடவேண்டா! இதனை நானாகச் சொல்லவில்லை, வள்ளுவர் சொல்லியிருக்கிறார் 'வாழ்க்கைத்துணை' என்று!

"இங்கே வள்ளுவர் அளவுமீறிப் புனைந்துரைத்து விட்டார். ஒருவேளை அவர் மனைவியார் அவ்வாறு நடந்திருக்கலாமோ, என்னவோ? சில பெண்டிரால், அவர்தம் கணவரது வாழ்க்கை பெரிதும் இடர்ப்படுகின்றதே --- வாழ்க்கைக்கே இறுதி நேர்ந்து விடுகின்றதே! அவர்தமை 'வாழ்க்கைத் துணை' எனல் வள்ளுவர்க்கு அடுக்குமா? என ஐயுறலாம் சிலர். வள்ளுவர் என்ன கொக்கா? அவர் அவ்வளவு தெரியாதவரா? ஆழம் தெரியாமல் காலை விட்டு அகப்பட்டுக்கொண்டு திணறுயவர் அல்லர் அவர், அதனால்தான், எல்லா மனைவியரும் வாழ்க்கைத் துணைகளாகி விடமுடியாது; மனைத்தக்க மாண்புடையளாகித் தற்கொண்டான் வளத்தக்காளே வாழ்க்கைத் துணையாவாள் என்றார் வள்ளுவப் பெருந்தகையார்.

'மனைத்தக்க மாண்பு' என்பது என்ன? முறை தெரியாத பெண்ணொருத்தியை நோக்கி, குடித்தனம் செய்கின்ற பெண்ணா காரணமா தெரியவில்லையே என்று உலகியலில்