பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

143


போல் 'மாண்புடையள்' என்னுந்தொடர் அமைந்திருக்கின்றதல்லவா! என்ன அழகு!


காமத்துப்பால்


குறிப்பறிதல்


குறிப்பறிதல் என்பது, தலைமகன் தலைமகளது உள்ளக் குறிப்பை அறிதலாம். அதாவது, அவளுக்குத் தன் மேல் காதல் இருப்பதாகக் குறிப்பாய் உணர்தல். மழைக்காக ஏங்கியிருந்தவர்களுக்கு மழை பெய்யும் அறிகுறி தென்பட்டாற்போல், அவளது காதலுக்காக இதுவரை ஏங்கியிருந்த அவனுக்கு அது கைகூடப் பெறும் குறிப்புக் கிடைத்துள்ளது. அதனால்தான் 'தகையணங்குறுத்தல்' என்னும் பகுதிக்குப் பின் 'குறிப்பறிதல்' என்னும் இப்பகுதி வைக்கப்பட்டதோ!.


நோயும் மருந்தும்


(தெளிவுரை) இவள் கண்களின் பார்வை இருவகையாய்த் தென்படுகின்றது. அவற்றுள் ஒரு பிரிவு நோய் செய்யும் நோக்காகும்; மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும்.

"இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து"

(இரு நோக்கு இவள் உண் கண் உள்ளது: ஒரு நோக்கு நோய் நொக்கு; ஒன்று அந்நோய் மருந்து .) (பதவுரை) இவள் உண் கண் = இவளுடைய மையுண்ட கண்களிலே, இரு நோக்கு உள்ளது - இரட்டை நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. ஒரு நோக்கு நோய் நோக்கு =