பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

ஆழ்கடலில்


என்பது புலனாம். உண்மையில் அவ்வாறு செய்யவேண்டும் என்பதா அவளது நோக்கம்? இல்லை. அவளது பார்வையிலே உள்ள கவர்ச்சி இயற்கையாய் அவனது காம நோயைத் தூண்டுகிறது; அவளது பார்வையிலே உள்ள காதல் குறிப்பு அவனுக்கு அமிழ்த மருந்தாகி ஆறுதல் அளிக்கிறது. அவ்வளவுதான்! நாடகத்திலே கூத்தடிக்கிறார்களே, அவ்வாறா நம் வள்ளுவர் படைப்பாகிய தலைமகள் நடந்து கொள்வாள்? இல்லை; அவள் நாணமுடையவளாதலின், கண் வீச்சிலே காதலைச் சொரிகிறாள். அந்தக் குறிப்பை அறிந்து கொள்கிறான் அவன். அதுதான் 'குறிப்பறிதல்' எனப்படுவது. முன்குறித்த 'குண நாற்பது' பாடலின் கருத்து. இந்தக் குறள் கொடுத்த கொடையாக இருக்குமோ!.

பொருள் பால்
கண்ணும் புண்ணும்

(தெளிவுரை) கற்றவர்களே கண்ணுடையவர் ஆவார்கள்; கல்லாதார் முகத்தில் இருப்பவை கண்கள் அல்ல - இரண்டு புண்களே!

"கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்"

(பதவுரை) கண்ணுடையர் என்பவர் கற்றோர் = உண்மையில் கண் உடையவர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுதற்கு உரியவர்கள் கற்றவர்களே யாவார்கள், கல்லாதவர் = கற்காதவர்களோ, முகத்து இரண்டு புண்ணுடையர் - முகத்திலே கண்கள் அல்ல- இரண்டு புண்கள் உடையவர்களாகவே கருதப்படுவார்கள்,