ஆணிமுத்துகள்
149
கொலை நூல்களையுமே படித்துக்கொண்டிருப்பவரெல்லோரும் கற்றவராகிவிடமுடியாது. ஆசிரியர் முதல் குறளில் கூறியுள்ளபடி, கற்பவை கற்று அதன்படி நிற்பவரே கற்றவராவர் - அவரே கண்ணுடையருமாவர் என்பதைக் கருத்தில் நிறுத்தவேண்டும். வாழ்க்கையில் ஒழுங்குற நடந்து கொள்ளாதவனை - தவறி நடப்பவனை நோக்கி, 'அடே குருட்டுப் பயலே' என்று வைவதும் இங்கு நினைவுக்கு வரவேண்டும். இந்த நுட்பத்தை உள்ளடக்கியே 'கண்ணு டையரென்பவர் கற்றோர்' என்றார் வள்ளுவனார்.
'கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்ற வரையும் சரி! மேலும் வேண்டுமானால், கல்லாதவர் கண்ணில்லாத குருடர் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே. இதை விட்டு, மிக மிகக் கடுகடுப்புடன், முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்' என்று ஆசிரியர் சொல்லியிருப்பது ஏன்? காணுகின்ற கண்களைப் புண்கள் எனல் பொருந்துமா?
கல்வியில்லாததற்காக மட்டும் வள்ளுவர் அப்படிச் சொல்லிவிடவில்லை. மேலும் காணுவதும் செய்வதால்தான் ஆசிரியர் புண் என்றார். உண்மைக் கல்வி - அறிவுக் கல்வி இல்லாதவனின் கண்கள், காணக்கூடா தவற்றையெல்லாம் கண்டு கொண்டு - ஒன்று கிடக்க ஒன்று புரிந்து கொண்டு, உடையவனுக்குத் துன்பம் தருவதால், துன்பமே செய்யும் புண்ணாக உருவகித்து விட்டார் ஆசிரியர். புண் என்றது பொருந்தவே பொருந்தாது என்கின்றீர்களா? கண்ணின் மேலே மாட்டிக் கொண்டிருக்கும் கண்ணாடி என்பது என்ன? கண் என்னும் புண்ணுக்குப் போடும் மருந்துதானே கண்ணாடியென்பது! எனவே, நாகரிக இளைஞர்களே, நீங்கள் கண்ணாடி போட்டுக்கொள்வதன் மூலம், உங்கள் கண்களைப் புண்கள் என மெய்ப்பித்துக் காட்டுகிறீர்கள். உண்மையில் உங்களுக்குத் துணைக்கண்