பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

ஆழ்கடலில்


பொருள் பண்ணியுள்ளார். அவர் உரைப்படி, குறளில் இல்லாத 'தலையாயினார்' என்ற சொல்லை வலிந்து கொண்டு வந்து புகுத்தாவிட்டால் உரை சரியாய் வராது. ஏன் இந்தத் தொல்லை? மேலும், உடையார் முன் இல்லாதவர் போல ஆசிரியர் முன் மாணவர் இருக்கவேண்டுமென்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை இக்காலக் கல்வி வல்லுநர்கள் மிகவும் வன்மையாகக் கண்டிப்துடன், ஏளனமும் செய்கின்றனர். இக்கால உளநூல் (Psychology), மாணவர் ஒன்றும் இல்லாதவர் அல்லர் -- எல்லாம் உடையவரே - அவரை இழிவாகக் கருதக்கூடாது என்கிறது. பாருங்கள், வள்ளுவரை இந்த நுண்ணிய உண்மையை அறியாதவராய்ப் படைத்துக் காட்டிப் பழியேற்றுகிறார் பரிமேலழகர். அன்றியும், ஆசிரியர் - (மாணவர்) என்ற சொற்களுக்கே குறளில் இடமில்லையே! உடையார்முன் இல்லார் - கற்றார் முன் கல்லாதவர், இது தானே இந்தக்குறளின் இயற்கையான அமைப்பு! எவ்வளவு அழகான அமைப்பு! எவ்வளவு அருமையான கருத்து!

முன் குறளில், கற்றோர்க்கும் கல்லாதவருக்கும் ஒரு வேறுபாடு காட்டினார் ஆசிரியர். அதாவது, கற்றாரைக் கண்ணுடையராகவும், கல்லாதவரைப் புண்ணுடையராகவும் சொல்லிக்காட்டினார். இந்தக் குறளிலோ இன்னொரு வேறுபாடு காட்டுகிறார். அதாவது, கற்றவரை உடையவராகவும், கல்லாதவரை இல்லாதவராகவும் படைத்துக் காட்டியுள்ளார் ஆசிரியனார். இந்தக் குறளில் 'உடையார்' என்றது செல்வரை; 'இல்லார்' என்றது வறியரை. உலக வழக்கில் கூட, பணக்காரனை உடையவன் - இருக்கிறவன் என்றும், ஏழையை இல்லாதவன் - எளியவன் என்றும் சொல்லுவது உண்டல்லவா?

இந்தக் குறளின்படி நோக்கின். கல்வி ஒருவகை உடைமை (செல்வம்) ஆகும்; கல்லாமை ஒருவகை இன்மை