பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

155


போலும் எனக்கூறி நகையாடுவார். நான் இவ்வளவு நேரம் வீண் கதை எழுதவில்லை. எழுத்துக்கு எழுத்து இந்தக் குறளின் விளக்கமேயாகும். வள்ளுவர் இல்லாள் - இல்லாள் என்று சொல்லியிருப்பதிலுள்ள உண்மை இது தான்! ஒரு சிலர் இந்தத் 'தத்துவத்தை' இன்னும் கூர்மையாகப் புரிந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மனைவி பேரால் வீடு வாங்குபவர்களைத்தான் சொல்லுகிறேன். ஆனால், அவர்கள், பங்காளிக்குப் பாய்ச்சல் காட்டுவதற்காகவும், கடன்காரர்களுக்குக் கடுக்காய் கொடுப்பதற்காகவும், பெண்டாட்டி. பேரால் வீடுகளை வாங்கிப் போட்டு விட்டதாக உலகினர் சொல்கின்றனர். அவர்களைக் கேட்டால். நாங்கள் 'இல்லாள்' என்னும் திருவள்ளுவர் வாக்குக்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்று சொல்வார்

சில குடும்பங்களில் கணவன் கட்டிக்கரும்பாய் இனி கிறான்; மனைவியோ எட்டிக்காயாய்க் கசக்கிறாள். எனவே, கணவனுக்குப் பண்பாடு இருந்தால் போதாது; மனைவிக்கு மாட்சிமை வேண்டும் என்பதை வற்புறுத்தலே, 'இல்லாள் கண். இல்லாயின் இல்' என்று அடுக்கினார் ஆசிரியர், இங்கே, இல்லாள் என்பதன் இறுதியில் உள்ள 'ள்' என்னும் எழுத்தையும். கண் என்னும் ஏழாம் வேற்றுமை உருபில் உள்ள 'ண்' என்னும் எழுத்தையும் நன்கு அழுத்தந்திருத்தமாக ஒலிக்க (உச்சரிக்க வேண்டுமல்லவா? அவ்வாறு அழுத்தி ஒலிக்கும்போது. அந்த வற்புறுத்தல் குறிப்புத் தோன்றுவது காண்க. இன்னும் இரண்டு முறை சொல்லிப் பார்ப்போம், 'மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின்' 'மனை மாட்சி இல்லாள் கண் இல்லாயின்.' என்ன சொல் நயம்! எவ்வளவு பொருள் நயம்! நேரில் பாடம் சொல்லும்