பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

157


மாட்சித்தாயினும் 'இல்' என்று ஒரே அடியாய் அடித்து, விட்டார். எனவே, மனைக்கு வாய்த்துள்ள மங்கையர்களே! என்ன செய்ய இருக்கின்றீர்கள்?


காமத்துப்பால்
களவியல் - குறிப்பறிதல்
பொதுநோக்கு நோக்குதல்


(தெளிவுரை) தொடர்பில்லாத அயலாரைப் போலப் பொதுவாகப் பார்க்கும் போக்கு, புதிதாகக் காதல் கொள்வோரிடம் உண்டு.

"ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள"

(பதவுரை) ஏதிலார் போல - (முன்பின் தொடர்பி லாத) அயலாரைப்போல, பொது நோக்கு நோக்குதல் = பொதுவான பார்வையுடன் ஒருவரையொருவர் பார்ப்பது, காதலார் கண்ணே உள - (புதிதாகக்) காதல் கொள்பவரிடம் உண்டு. (ஏதிலார் - அயலார்).

(மணக்குடவர் உரை) அயலார் போலப் பொதுநோக்கத் தால் நோக்குதல் காதலித்தார் மாட்டே யுளதாம்.

(பரிமேலழகர் உரை) முன்னறியாதார் போல ஒருவரை யொருவர் பொதுநோக்கத்தா னோக்குதல், இக் காதலை யுடையார் கண்ணே யுளவாகா நின்றன -- (தோழி சொல்லியது)

(விளக்கவுரை) நாம் வெளியே தெருவே போய்க் கொண்டிருக்கும்போது பலரைப் பார்க்கிறோம்; அறிமுக