பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

ஆழ்கடலில்


மானவரையும் பார்க்கிறோம்-அயலாரையும் பார்க்கிறோம். அறிமுகமானவரைப் பார்க்கும் பார்வைக்கும் அயலாரைப் பார்க்கும் பார்வைக்கும் வேற்றுமையுண்டு, அயலார் எல்லோரையும் பொதுவில் பார்க்கிறோம். அறிமுகமான வரைச் சிறப்பாய் நோக்குகிறோம். எனவே, நோக்கிலே, பொது நோக்கு, சிறப்பு நோக்கு என இருவகையுண்டு.

எந்தத் தொடர்பும் இல்லாத காளையொருவனும் கன்னியொருத்தியும் கண்ணுறும்போது பொதுநோக்கே நோக்கிக் கொள்வர். காதல் தொடர்புடைய காளையும் கன்னியமோ சிறப்பு நோக்கு நோக்கிக்கொள்வர். ஏன் - இதற்கு முன்பு தொடர்பில்லாத காளையுங் கன்னியுங்கூட, முதல் முதல் தொடர்பு கொள்ளும்போது. உள்ளத்திலே ஆர்வம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டாது. ஒன்றும் அறியாதார் போலவே - பார்த்தும் பாராதவர் போலவேபட்டுக்கொள்ளாதவர் போலவே பொது நோக்கு நோக்கிக் கொள்வர். இது, மூன்று தாள் திருப்பும் வேலைக்கு அண்ணனாகும்.

மூன்று தாள் திருப்பிக் காசு பறிக்கும் சூதாட்டக்காரன், மூன்று சீட்டாட்டத் தாள்களை மாற்றி மாற்றிக் காட்டிக் கவிழ்த்துப் போட்டுவிட்டு. 'இதிலே வை - அதிலே வை - எதிலே வேண்டுமானாலும் வை காசு' என்று கூவிக்கொண்டிருப்பான், அவனைச் சூழ்ந்து பலர் நின்று கொண்டிருப்பர். அவர்களுள், அவனுடைய கையாட்களும் அங்கும் இங்குமாக இறைந்து நிற்பர். அந்தக் கையாட்களும் ஒன்றும் அறியாதவர் போலக் காசு வைப்பர். சூதாட்டக்காரனோடு நேர்மையாக வாதாடுபவர் போல் நடிக்கவுஞ் செய்வர். இவர்களும் தாள் திருப்புபவனும் பிறரை ஏய்ப்பதற்காகத் தமக்குள் தொடர்பில்லாதவரைப் போல் நடிக்கின்றனர். ஆனால், முதல் முதலாகக் காதல் கொள்ளும்