ஆணிமுத்துகள்
161
- "தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
- கற்றனைத் தூறு மறிவு"
(பதவுரை) தொட்டனைத்து = தோண்டிய ஆழம் அகலத்திற்கு ஏற்ப, மணல்கேணி ஊறும் - மணற்பாங்கில் உள்ள கேணியில் நீர் ஊறும்; (அதுபோல) மாந்தர்க்கு - மக்களுக்கு, கற்றனைத்து = கற்ற நூல்களின் - காலத்தின் அளவுக்கு ஏற்ப, அறிவு ஊறும் = அறிவுத்துறை வளரும். (தொடுதல் = தோண்டுதல்; மாந்தர் = மக்கள்; அனைத்து அந்த அளவு.)
(மணக்குடவருரை) அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்; அது போல, மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம்.
(பரிமேலழகருரை) மணலின் கட் கேணி தோண்டிய வளவிற்றாக ஆறும்; அதுபோல, மக்கட்கறிவு கற்ற வளவிற்றாக ஆறும்.
(ஆராய்ச்சி விரிவுரை) இந்தக் குறளில் கவனிக்க வேண்டிய நுட்பங்கள் பல உள்ளன. இக்காலக் கல்வி நெறியாளர்கள். முற்காலக் கல்வி நெறியாளரின் கல்விக் கொள்கையை மறுத்து நகையாடுகின்றனர். "மாணாக்கர்கள் ஒன்றும் அறியாதவர்கள் - ஓர் ஆற்றலும் இல்லாதவர்கள்; அவர்களின் மனம் வெற்றிடம்; அம்மனத்தில் ஆசிரியர் பலவற்றைப் புதிதாகப் புகுத்துகிறார். நம்மிடம் இல்லாத பொருளை நாம் கடைக்குச் சென்று வாங்கி வருவதைப் போல, மாணாக்கர்கள் தம்மிடம் இல்லாத பொருளைப் பள்ளிக்கூடம் சென்று பெற்று வருகிறார்கள்" என்றெல்லாம் பழைய காலத்தில் எண்ணிக் கொண்டிருந்தார்களாம். இக் காலத்திலும் இவ்வாறு எண்ணுபவர் உளரல்லவா? ஆனால், இக்காலக் கல்வித்துறை உளநூல் (Educational Psychology) கூறுவதென்ன? "மாணவன் மனம் இயல்