பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
162
ஆழ்கடலில்
 

பாகவே பல ஆற்றல்களையுடையது; அவ்வாற்றல்கள் அடங்கியுள்ளன; அவற்றுக்குத் தக்க வாய்ப்புகள் கொடுத்து வெளிப்படுத்தி நல்ல முறையில் வளர்த்து, சூழ்நிலைக்கு ஏற்பப் பொருந்தி வாழ மாணவனைப் பயிற்றுவதுதான் ஆசிரியர் வேலை - பள்ளிக்கூடத்தில் செய்ய வேண்டிய பணி என்றெல்லாம் இக்காலக் கல்விக் கொள்கை பறை சாற்றப்படுகிறது, சரி நல்லது! இக்காலக் கல்விக் கொள்கை வாழ்க!

ஆனால், இங்கே நான் சொல்லவிரும்புவது என்ன வெனில், பழைய 'பத்தாம் பசலிக்' கொள்கையை மற்றவர்போல் தாமும் நம்பியிராமல், இக்காலக் கல்விக் கொள்கையை அக்காலத்திலேயே இந்தக் குறளில் வள்ளுவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் - என்பதே. இதனைச் சிறிது விளங்க நோக்குவாம்:-

தோண்டிய அளவிற் கேற்பக் கேணி சுரப்பதுபோல், கற்ற அளவிற்கேற்ப அறிவு சுரக்கும் - என்பது குறட் கருத்து. கேணி தோண்டுபவர்கள், வெளியிலிருந்து புதுத் தண்ணீர் கொண்டு வந்தா கேணிக்குள் கொட்டுகின்றனர்? இல்லை; கேணிக்குள் முன்னமேயே இயற்கையாகவே இருக்கும் தண்ணீரைத்தான் தோண்டி வெளிப்படுத்துகின்றனர். அது போலவே, கல்வித்துறையில் பார்த்தாலும், புதிதாக ஒருவர் மற்றொருவர்க்கு அறிவைக் கொண்டு போய்ப் புகுத்திவிட முடியாது; இருக்கிற அறிவைத்தான் வெளிப்படுத்தி வளர்க்கின்றனர். இதுதான் இந்தக் குறளின் கருத்து - இக்காலக் கல்விக் கொள்கையும் இதுதான்! எனவே, ஆசிரியர், மாணவனை நோக்கி, மண்டுவே -- மடையனே! நீ எங்கே உருப்படப் போகிறாய்? என்றெல்லாம் வைது ஊக்கத்தைக் குறைக்கலாகாது. முயன்றால் எதையும் முடிக்கும் எல்லா ஆற்றலும் ஏற்கெ-