பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

171


தும். 'மாண்பானால்; 'மாணாக்கடை' என்னும் இருவகை உடன்பாட்டு. எதிர்மறை எச்ச முடிவுகளும் உணர்த்தி நிற்கின்றன வன்றோ? மாண்பானால், மாணாக்கடை என்ப வற்றின் இறுதியில் உள்ள 'ஆனால்', 'கடை' என்னும் இரண்டும் ஒருவகை வினையெச்ச விகுதி முடிவுகளாம். (Adverbial clause).

இனி இக்குறட் கருத்தைச் சிறிது விளங்க நோக்குவாம் - வீட்டில் போதிய பொருள்கள் இல்லாவிடினும், போதிய திறமையும் ஊக்கமும் உடைய மனைவி, எல்லாம் இருக்கும் வீட்டைவிடத் தன் குடும்பத்தைச் சீர்திகழச் செய்வாள்; திறமையும் ஆர்வமும் இல்லாதவளோ, எல்லாம் இருப்பினும், ஒன்றும் இல்லாத வீட்டை விடத் தன் குடும்பத்தைப் பாழ்படுத்துவாள். முன்னவள் செட்டாகப் புதிய பொருள்களைச் சேகரிப்பாள் -- நீண்டநாள் வைத்துப் படைப்பாள். பின்னவளோ, புதிய பொருள்களைச் சேகரிப்பதுஞ் செய்யாமல் உள்ள பொருள்களையும் விரைவில் அழித்து ஒன்றும் இல்லையாக்குவாள். முன்னவள், வீட்டிற்கு விருந்தினர் வந்தால், குறைந்த பொருளைக் கொண்டே பலவகைக் கறிகள் செய்து உணவு படைப்பாள்; பின்னவளோ, எல்லாம் இருப்பினும், இரண்டொன்றும் சரியாய்ச் செய்யாது கடனைக் கழித்தனுப்புவாள். முன்னவள் தன் ஏழைக் கணவன் இன்று காய் கறி வாங்கக் காசு இல்லையே என்றால், நேற்று வாங்கி வந்தவற்றுள் மிச்சம் உளது என்பாள்; பின்னவளோ, தன் கணவன் இன்றைக்கு என்ன வேண்டும் என்றால், நேற்று வாங்கி வந்தவை போதவில்லை, இன்றைக்கு இன்னும் நிறைய வாங்கிவர வேண்டுமெனக் கட்டளையிடுவாள். மேலும், இருப்பதைக் கொண்டு கணவன் முதலியோரை இன்புறுத்தித் தானும் இன்புறுவாள் முன்னவள்; எல்லாம் இருப்பினும், ஒரு விழுங்கு வெந்நீருக்கு வழியின்றித் திண்டாடித் தவிக்கவிடுவாள் பின்னவள். வேறு