பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறன்வலியுறுத்தல்
ஒல்லும் வகை
"ஒல்லும் வகையான் அறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்"

(ப-ரை) அறவினை - அறச்செயல்களை, ஒல்லும் வகையான் - முடிந்த அளவிலே, ஓவாதே - விடாமல், செல்லும் வாய் எல்லாம் - செய்யக்கூடிய வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம், செயல் - (நீ) செய்வாயாக.

(தெ-ரை) உடல் வளம் இல்லாதவன் பிறர்க்கு மிகுதியாக உழைத்து உதவவேண்டியதில்லை; பொருள் வளம் இல்லாதவன் பிறர்க்கு மிகுதியாகக் கொடுத்து உதவ வேண்டியதில்லை: தங்கள் தங்களால் முடிந்த அளவு உதவினால் போதும்; ஒரு சிறிதும் உதவ முடியாவிட்டாலும் ஒரு தீமையும் செய்யாமல் இருந்தாலே பன்மடங்கு மேல்: எல்லாவளமும் இருக்கப் பெற்றவர்கள் ஏராளமாகப் பிறர்க்கு உதவவேண்டும் - என்னும் கருத்துகளையெல்லாம் உள்ளடக்கியே "ஒல்லும் வகையான்" என்றார்.

‘மனிதனுடைய தொழில்கள் மூவகைப்படும். அவை:--நினைத்தல், பேசுதல், செய்தல் என்பனவாம். மனிதன் இம் மூன்று தொழில்களையும் ஒரு நொடிப்பொழுதும் ஓயாமல் மாறிமாறிச் செய்துகொண்டேயிருக்கிறான். எனவே, தீயன நீக்கி நல்லனவற்றையே நினைக்கவேண்டும்; பேசவேண்டும்; செய்யவேண்டும். கனவிலுங்கூட நல்லன. வற்றையே நினைக்கவும், பேசவும், செய்யவும்வேண்டும். அஃது எப்படி முடியும் எனின், விழித்துக்கொண்டிருக்கும் போது நல்லவிதமாக நடந்துகொண்டால் கனவிலும் அப்படியே நடக்கும். விழித்துக்கொண்டிருக்கும்போது கெட்டவிதமாக நடந்து கொண்டால் கனவிலும் அப்படியே நடக்கும். இஃது ஒருவகை உயிர்த் (தத்துவம்) தன்மை என உணர்க. எனவே, மனிதன் நாடோறும் இருபத்து