பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

175


நான்கு மணிநேரமும் அறவழியில் நிற்கவேண்டும் என்பது புலனாகும். இக்கருத்துகளையெல்லாம் உள்ளடக்கியே 'ஓவாது' (விடாமல்) செய்க என்றார் ஆசிரியர். 'பிறர்க்கு உதவி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடின் தட்டாது செய்தே தீர வேண்டும். கட்டாயம் ஏற்படா விடினும் தாமாகவே பரிந்து சென்றும் செய்யவேண்டும். இவ்விருவகையாகத் தாம் செய்யும் உதவியை ஏற்றுக் கொள்ள ஆள் கிடைக்காவிட்டாலும், வழியில் உள்ள கல் முள், கண்ணாடி ஓடு முதலியவற்றை நடக்கும்போதே அப்புறப்படுத்தலாம்; தனியாக அமர்ந்து நல்ல நூல்களை எழுதலாம்; கைத்தொழில் செய்யலாம்; இவ்விதம் இன்னும் பல இயற்றலாம்' - இக்கருத்துகளை யெல்லாம் உள்ளடக்கியே 'செல்லும்வாய் எல்லாம் செயல்' என்றார் இந்நயங்கள் இனிக்கச் செய்கின்றன. அன்றோ ? எனவே, எம்மால், எப்போதும், எப்படி அறச்செயல் செய்யமுடியும் என்றியம்பி, எவரும் வாளா (வீணாக) காலங் கழிப்பதற்கு வழியில்லையல்லவா?

நீ-தோன்றா எழுவாய்; செயல்- பயனிலை. செயல் ! என்பது அல்லிகுதி பெற்ற வியங்கோள் வினைமுற்றாம்.

(மண-உரை) தமக்கியலும் திறத்தானே , அறவினையை ஒழியாதே செய்யலாம் இடமெல்லாம் செய்க,

(பரி - உரை) தத்தமக் கியலும் திறத்தான், அறமாகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க.

அறத்தாறு
'அறத்தா றிதுவென(ல்) வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.'

(ப-ரை) சிவிகை-பல்லக்கை, பொறுத்தானோடு-சுமந்து செல்பவனுக்கும், ஊர்ந்தான் - (பல்லக்கின் மேல்) ஏறிச்