பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
176
ஆழ்கடலில்
 

செல்பவனுக்கும், இடை - நடுவில் உள்ள, அறத்து ஆறு - அறத்தினுடைய தன்மை , இது - இன்னது, என(ல்) வேண்டா- என்று (யாம்) சொல்ல(ல்) வேண்டியதில்லை. நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.

(தெ-ரை) அறச்செயலே செய்யும் பெரியார் ஒருவரைப் பிறர் போற்றிப் பல்லக்கில் ஏற்றிச் சிறப்பு (மரியாதை) செய்கின்றார்கள். எனவே, அறச்செயல் புரிந்த ஒரு மனிதன், தன்னைப்போல அறச்செயல் செய்யாத மற்றைய மனிதனால் சிறப்பிக்கப் பெறுகின்றான் என்பது புலனாகும். ஆகவே, அறம் எத்தகைய பெருமையுடையது என்பது சொல்லாமல் விளங்குமே!

(மண-உரை) நீங்கள் அறநெறி இத்தன்மைத்து என்று அறிய வேண்டா. சிவிகையைக் காவுவானோடு செலுத்து வானிடைக் காணலாம்.

(பரி-உரை) அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம் அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.

(ஆராய்ச்சி உரை) இக்குறளுக்குப் பலர் பலவிதமாகப் பொருள் உரைக்கின்றனர். அறம் செய்யாத தீயோன் (பாவி) பல்லக்கைச் சுமந்து துன்புறுவான்; அறம் செய்த நல்லோன் (புண்ணியசாலி) பல்லக்கின் மேல் ஏறி இன்புறுவான் என்ற கருத்தில் பழைய உரையாசிரியர்கள் பலர் உரை எழுதியுள்ளனர்.

"பல்லக்கைச் சுமந்து உதவி செய்பவனே அறம் செய்யும் நல்லோன் ஆவான். பல்லக்கின் மேல் ஏறிச் சுமப்பவனுக்குச் சுமைதந்து வருத்துபவனே கொடுமை செய்யும் கொடியோன் ஆவான்" என்பது பிற்காலத்திய சிலரின் பேருரை.