பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆணிமுத்துகள்
177
 

எமது கருத்து இவ்விரண்டும் அன்று. அஃதாவது:-- 'சுமப்பவனும் பாவியல்லன், ஊர்ந்து செல்பவனும் பாவியல்லன். சுமப்பவனைக் காட்டிலும் ஊர்ந்து செல்பவன் உயர்ந்தவன் என்பதே' -- உயர்ந்தவன் என்றால் எவ்விதத்தில்? சாதியாலா? சமயத்தாலா? செல்வத்தாலா? தொழிலாலா? அல்லது வேறு பிறவற்றாலா? இல்லையில்லை. எண்ணம், பேச்சு, செயல் என்னும் மூன்றும் நல்லனவாய் இருப்பதனாலேயே உயர்ந்தவன். இதனைப் பற்றிச் சிறிது ஆராயலாம்:

முன்பு அயல் நாட்டில் ஒருவர் தம் கழுத்தில் இருந்த வெள்ளைத் தழும்பை (வெண்குஷ்டம்) வெளியில் காட்ட வெட்கப்பட்டு, அதனை மறைப்பதற்காக 'டை' (தற்காலத்தில் கழுத்தில் கட்டப்பட்டுத் தொங்கும் உடை) கட்டிக் கொண்டாராம். அது பிறர் கண்ணுக்கு அழகாகவும் ஆடம்பரமாகவும் காணப்பட்டதாம் பின்பு அனைவரும் அங்ஙனமே செய்ய ஆரம்பித்தார்களாம். அஃது இப்போது ஆடம்பர உடையில் ஒரு கட்டாய இடம் பெற்றுவிட்டதன்றோ?

செல்வர் ஒருவர் தம் மகள் மேல் உள்ள அன்பாலும், மருமகன் மேல் உள்ள ஆர்வத்தாலும், தம் செல்வ வளத்தாலும், மருமகனுக்கு அளவுமீறிச் சிறப்புச் செய்திருப்பார். அதனைக் கண்டு மற்றொருவரும் அங்ஙனமே செய்திருப்பார். அது நாளடைவில் கட்டாயமாகிவிட்டது. ஓர் ஆடு குதித்தபடி மற்றைய ஆடுகளும் குதிக்குமாம்!

உண்மைப் பெரியார் ஒருவர். எண்ணம், பேச்சு, செயல்களால் நல்லவராயிருந்திருப்பார். ஏனையோர் அவர்க்குப் பெருஞ் சிறப்புச் செய்திருப்பார்கள். அவர்மேல் உள்ள பெருமதிப்பால் அவரை நடக்கவிடாமல் பல்லக்கில் ஏற்றித் தாமே 8மந்திருப்பர். விசிறி விசிறியிருப்பர். இன்னும் பல