பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

ஆழ்கடலில்


சாலப்பொருந்துகிறது. இந்த வரிசையிலேயே மக்கள் சமூகத்தின் வாழ்வு தொடர்கிறது. உளநூல் வல்லுநர், மக்கள் மனத்தின் இயற்கைப் பண்புகளை, தற்காப்பு ஊக்கம், இனக்காப்பு ஊக்கம், சமூக ஊக்கம் என மூவகையாகப் பிரித்துள்ளனர். உணவு உணர்ச்சி முதலியன தற்காப்பு ஊக்கத்தில் அடங்கும். காதல் உணரிச்சி, குழந்தைப் பற்று என்னும் இரண்டும் இனக்காப்பு ஊக்கமாகும். கூட்டுணர்ச்சி, முதன்மையுணர்ச்சி முதலியன சமூக ஊக்கமாம். இந்த வரிசை முறையினையும் ஊன்றி நோக்குக. மேலும் இக்கருத்துகளை, தமிழ்த் திருவடிகளார் அப்பர் பெருமானார் அருளிய,


பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளிலாது கெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டிச் சரத்துளானே”


கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனிமலர்க் குழல் பாவைகல் லாரினும்
தனிமுடி கவித்து ஆளும் அரசினும்
இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே”

என்னும் தேவாரப் பாக்களோடு ஒத்திட்டு மகிழ்க.

எனவேதான் ஈண்டு இன்பத்துப் பால் தொடங்கப் பெறுகிறது. வள்ளுவர் வீடு, அறம், பொருள், இன்பம் என வைத்திருந்தாலும், இன்பத்தினும் பொருளும், அதனினும் அறமும், அதனினும் வீடும் சிறப்பு மிகவுடையனவாதலால், சிறப்பு கருதி அவ்வரிசை தரப்பட்டிருக்கலாம். இருப்பினும், நூல்களைப் பிறருக்கு விளக்குங்கால் தெரிந்ததிலிருந்து தெரியாததற்கும் எளிமையிலிருந்து அருமைக்கும், இன்பமான சூழ்நிலையிலிருந்து கடுமைக்கும் ஆசிரியர் அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்னும் உளநூல் விதிப்படி,