பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

185


பலரும் உரைத்துள்ளனர். ஆனால் சிலர், இக்குறளுக்கு வேறுவிதமாகப் பொருள் உரைக்கின்றனர். அது வருமாறு:--

குணமென்னும் குன்றேறி நின்றவர்கட்கு ஒரு நாளும் ஒரு கண நேரங்கூடச் சினந்தோன்றாது. அஃதாவது, அவர்கள் தம்மிடத்தில் சிறிதும் சினத்தைப் பாதுகாத்து வைத்திருக்க மாட்டார்கள் என்பது அவர் கூறும் பொருள். மேலும் அவர்கள், பெரியோர்கள் குணமென்னும் குன்றேறி நின்றவராதலின் அவர்க்கு இழிந்த சினம் தோன்றாது; அப்படித் தோன்றினால் அவர்கள் குணமென்னும் குன்றேறி நின்ற பெரியா ராகாமல் சிறியவ ராவார்கள் என்று தம் கொள்கைக்குக் காரணமும் காட்டுகின்றார்கள். இப்பொரு ளிலா திருவள்ளுவர் இக்குறளை யமைத்திருப்பார்? என்று இங்கு ஆராய வேண்டும்.

'பெரியோர்க்குத் தப்பித் தவறிச் சினம் சிறிது வந்து விடுமேயாயின் பிறரால். தடுக்க முடியாது' என்று திருவள்ளுவரே உரையெழுதி யுள்ளார். ஒருமுறை யன்று, இருமுறை யல்ல, பலமுறை இவ்வுரையை எழுதியுள்ளார். எங்கோ (வெனின், இயம்புவம்:-- திருக்குறளுள் பொருட் பாலுள், பெரியாரைப் பிழையாமை என்னும் பகுதியில் உள்ள,

'எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்',
'வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்',
'குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து',
'ஏந்திய கொள்கை யார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்',