பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
188
ஆழ்கடலில்
 

நிறைந்து கொண்டேயும் இருக்கின்றது; புது நீர் புகுந்து நிறையும்போது நீராவியாகக் குறைந்து கொண்டேயும் இருக்கின்றது. ஆதலின் கடல் நீர் குறையவோ மிகவோ வழியில்லை என்னும் கருத்துடைய,

"மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரையொரு திரங்கு முந்நீர்"

என்னும் மதுரைக்காஞ்சியின் அடிகளும் குறிப்பாகவும், நயமாகவும் மேற்சொல்லப்பட்ட கருத்தையே வலியுறுத்துகின்றன. மற்றும், ஊற்று நீர், ஆற்று நீர், மழை நீர் என்னும் மூவகையான நீரையுடைய காரணத்தால், கடலுக்கு 'முந்நீர்' எனும் பெயர் வழங்கப்பட்டது என்னும் ஒரு செய்தியும் இங்கே இக்கருத்துக்கு அரண் செய்யும்.

எனவே, கடல் நீர் நீராவியாக மாறி மழையாகப் பெய்தல் இன்றி, பனியாகவோ, வேறு விதமாகவோ சிதைந்துவிட்டால் வளம் குன்றவேண்டியது தானே'! கடல் வளம் குறைதல் என்றால், நீர்வாழ் உயிர்கள் தோன்றி வாழாமையும், முத்து முதலிய மணிகள் உண்டாகாமையுமாம். வலைஞர்க்கு வலைவளம் சிறக்க வேண்டுமானால் " பாட்டம் (மழை) பொய்யாது பெய்யவேண்டும் என்பதை, நற்றிணை யென்னும் சங்க நூலில் உள்ள (38) "பாட்டம் பொய்யாது வலைவளம் சிறப்ப" என்னும் அடியும் அறிவிக்கின்றது. எனவே, கடல்வாழ் உயிர்கள் தாம் வாழும் கடலில் புதுத்தண்ணீர் புகுவதை, நிலத்திற்குப் புதிய எரு இடுவதைப்போன்று விரும்பி வரவேற்கின்றன என்பது வெளிப்படை.

கடலினும் மழை உயர்ந்தது என்றுரைக்க வந்த திருவள்ளுவர் இங்கு நயமான சொற்களைப் பெய்திருக்கும் திறம் தேனினும் தித்திக்கின்றது. அஃது வருமாறு: -- வட கடல் தான் மிகப் பெரியதாயிருப்பினும் மழையில்லாவிட்டால்