பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

ஆழ்கடலில்


கருதப்படவேண்டும். வருந்தியழைத்தாலும் விருந்துக்குச் செல்லாத ‘பெரிய மனிதர்’ சிலர் பிறர்பெண்களை விரும்புகின்றனர். இந்த எச்சில் உண்ணிகளை என்னென்பது! இந் நிலையைச் சாடி, உண்மைக் காதல் வாழ்வை உலகிற்கு வற்புறுத்தும் வள்ளுவர் குறள்களைக் காண்பாம்.

காமத்துப்பால்

ஒருவன்-ஒருத்தியின் காதல் இன்பவாழ்வைப் பற்றிக் கூறுவது காமத்துப்பால்.

பண்டைத் தமிழறிஞர்கள், மக்கள் வாழ்வை அகம் புறம் என இரண்டாகப் பிரித்தனர். ஒருவன் ஒருத்தியின் அகம் கலந்த-உள்ளம் ஒத்த காதல் வாழ்வு அகமாகும். அஃதல்லாத புறவாழ்வு-வெளியுலக வாழ்வு புறமாகும். இதன்படி நோக்கின், திருக்குறள் காமத்துப்பாலை அகம் எனவும், ஏனையவற்றைப் புறம் எனவும் கொள்ளல் வேண்டும்.

களவியல்

அகக் காதல் வாழ்வாகிய காமப்பகுதி களவியல், கற்பியல் என இரண்டாகப் பகுக்கப் பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் பிறரறியாமல் மறைமுகமாகக் கொண்டொழுகும் காதல் வாழ்வு களவியலாகும். பின்னர், திருமணம் புரிந்துகொண்டு வாழும் வாழ்க்கை கற்பிய லாகும். முறையே ஈண்டு முதலில் களவியல் பேசப்படும்.

தகையணங்குறுத்தல்

கவின் மிக்கவனாகிய கட்டிளங்காளை ஒருவன் கவின் மிக்க கட்டிளங் கன்னி ஒருத்தியைக் கண்டான். அவள்