பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

ஆழ்கடலில்மேலும், அவ்வுருவம் தன்னை மாறி மாறி நோக்கியதால், இது ஒரு மனிதப் பெண்தானோ என்ற ஐயம் அவனுக்கு எழுந்தது. உண்மையும் அதுதானே? உச்சியிலே-வானவூர் தியிலே திரிந்தவன் தரைக்கு வந்துதானே தீரவேண்டும்?

பழைய உரையாசிரியர்கள், கனங்குழை என்பதை முதலில் எடுத்துக் கொண்டு, கனங் குழையை உடைய இந்தப் பெண், தெய்வப்பெண்ணோ மயிலோ, மனிதப் பெண்ணோ என்று பொருள் கூறியுள்ளனர். இவ்வாறு பொருள் கோடல், காலணா அடை யொன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, இந்தக் காலணா அடை அரையனாவோ முக்காலணாவோ அல்லது காலணாதானோ என்று கூறுதற்கொப்பாகும். இது பொருந்தாது. எனது பொருளுக்கேற்பவே, குறளின் ஆற்றொழுக்கு நடை அமைந்திருப்பதையும் நோக்குக.

அக்காலத்தில், மிகக் கனமான காதணி அணிந்தனர் என்பதைக் 'கனங்குழை’ என்பது காட்டுகின்றதன்றோ?

அடுத்துப் பொருள் பாலும் அதனை அடுத்து அறத்துப் பாலும் இடம் பெறும், இவ்வாறே தொடர்ந்து மூன்று பால்களும் மாறி மாறி வரும்.

பொருட்பால்


பொருட்பால் என்பது பணங்காசைப் பற்றியதன்று. பொருட்பாலில் பெரும்பாலும் அரசியல்தான் (Politics) பேசப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வுக்கு வேண்டிய வளமான பொருளாதாரத்தைச் செழிக்கச் செய்வது அரசியல் அமைப்புதானே? - திறமான ஆட்சி முறைதானே? உலகில் ஒரு நாடு பொருளாதாரத்தில் செழித்திருக்கிறதென்றால், அதற்காக அந்நாட்டு மக்கள் அரும்பாடு பட்டிருந்தாலுங்