பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆணிமுத்துகள்
29
 


பிறகு நட்பு: துன்ப வேளையில் துணைபுரியும் நட்பரசர் களும் (நேசநாட்டினரும்) மன்னனுக்கு வேண்டும். அந்த வேலையை இப்போது அமெரிக்காவும், ரழ்சியாவும் தங்கள் தலைமேல் தூக்கிப்போட்டுக் கொண்டுள்ளன. இறுதியாக அரண்: கோட்டை-கொத்தளங்கள், கடல், மலை, படைத் தளங்கள் முதலிய பாதுகாப்பளிக்கும் சூழ்நிலையும் வேண்டும்.

இந்த ஆறும் உடையான் அரசன். உடையான்’ என்னுஞ் சொல்லை ஊன்றி நோக்குக. தன்னுடையனவாக. தனக்குரியனவாக உடையவனே அரசன்-அரசருள் அரசன். பிறரிடம் பெறுபவன் அவனுக்குக் கீழ்ப்பட்டவனே. உண்மைதானே இது! இனி அறத்துப்பால் வருக,

அறத்துப்பால்

மக்கள் ஒழுகவேண்டிய - பின்பற்றி நடக்கவேண்டிய நல்ல நீதி நெறி முறைகளைக் கூறும் பகுதி அறத்துப்பால். இதனை இல்லறவியல், துறவறவியல் என இரண்டாகப் பகுத்துள்ளனர். முதலில் உள்ள இல்லறத்தினை முதலில் கற்ற காமத்துப்பாலின் தொடர்ச்சியாகவும், அடுத்துள்ள துறவறத்தினை இரண்டாவதாகக் கற்ற பொருட்பாலின் தொடர்ச்சியாகவும் அக உள்ளத்தில் அமைத்துப் பார்ப்பதும் ஒர் அழகே! எனவே. காமத்துப்பால் - பொருட்பால்களின் முடிமணியாக அறத்துப்பாலைக் கொள்ளலாமன்றோ?

மக்களே, காமத்திலேயே தோய்ந்து விடாதீர்கள், காதல் வாழ்விலேயே திளைத்து விடாதீர்கள், இல்லறம் ஒழுங்காக நடைபெற வேண்டும் எனவும், பொருளியலிலேயே வீழ்ந்து கிடக்காதீர்கள், உலகியலிலேயே ஆழ்ந்து