பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34
ஆழ்கடலில்
 

நோக்கித் தன் மனக்குறிப்பாலும் என்னை வருத்துகிறாளே. இயற்கையாகவே தானே பிறரைத் தாக்கி வருத்தக்கூடிய ஒரு துடுக்குத் தெய்வம் (துஷ்ட தேவதை) தனக்குத் துணையாகப் பெரிய படையையும் அழைத்துக்கொண்டு வந்திருப்பது போலல்லவா இருக்கிறது இது?

"நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து."

(பதவுரை) நோக்கினாள் = நல்ல தோற்றமுடைய அந்தப் பெண், நோக்கு எதிர் நோக்குதல் = என் பார்வைக்கு எதிர் எதிராக. அதாவது நான் பார்க்கும் போதெல்லாம் - தானும் பார்ப்பது, தாக்கு அணங்கு = தானே தாக்கி வருத்தக் கூடிய ஒரு துடுக்குத் தெய்வம், தானை கொண்டன்னது உடைத்து = படையையும் தன்னுடன் கொண்டு வந்திருப்பது போன்ற தன்மையை உடையதாம். (நோக்கு = அழகுத் தோற்றம், கண் நோக்கு; அணங்கு = வருத்தும் தெய்வம்; தானை = படை (சேனை) அன்னது - அது போன்றது; கொண்டன்னது = கொண்டு வந்திருப்பது போன்றது.)

(மணக்குடவர் உரை) இவ்வழகிளை யுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்த வல்ல தெய்வம் அஞ்சாமல் வரும் தானையைக் கொண்டுவந்தது போலும்.

(பரிமேலழகர் உரை ) இப்பெற்றித்தாய வனப்பினை யுடையாள் என்னோக்கிற் கெதிர் நோக்குதல், தானே தாக்கி வருத்துவதோ ரணங்கு தாக்குதற்குத் தானையையுங் கொண்டுவந்தாற் போலுந் தன்மையை யுடைத்து.

(விரிவுரை) நோக்கெதிர் நோக்குதல் என்றால் என்ன? ஏதோ ஒர் உள்நோக்கு- உள் கருத்து ஒன்றிருந்தால் தான் நோக்கெதிர் நோக்குதல் நடைபெறும். (நோக்கெதிர் நோக்கு கிறாள் என்ற போதே, ஏதோ ... ஆமாம்... உள்பொருள்