பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆணிமுத்துகள்
45
 

எப்படித் துறவிகள் என்னும் பெயரால் அழைக்க முடியும்? வருண நாமங்களையே துறவாதவர்கள் வேறு எவற்றைத் தாம் துறக்க உடன்படுவார்கள்? நிற்க-

பரிமேலழகரும், முன் குறளிலேயே துறந்தாரைக் கூறி விட்டாராதலின், இக்குறளில் உள்ள துறந்தார் என்பதற்கும் துறவி எனப் பொருள் கூற உடன்பட்டிலர், ஆனால் இவரும் வேறு விதமாகச் சரிசெய்யப் பாடுபட்டு உள்ளார். அஃதாவது :- துறந்தார் என்றால், இவ்வளவு நாள் காப்பாற்றி வந்தவர்களால் கைவிடப்பட்டவர்கள் (துறக்கப்பட்டவர்கள்) என்று கூறியுள்ளார். இங்ஙனம் துரத்தப்பட்டு இன்பம் அனுபவிக்க முடியாமல் தவிப்பவர்களைத் 'துவ்வாதவர்' என்பதற்குள் அடக்கி விடலாமே! மற்றும் துறந்தார் என்னும் செய்வினையை, துறக்கப்பட்டார் எனச் செய்யப்பாட்டு வினையாக வலிந்து கொண்டு இடர்ப்படவும் வேண்டியதில்லையே! எனவே ஈண்டு துறந்தார் என்பதற்குப் பற்றுக்களைத் துறந்த பெரியோர்கள் என்று பொருள் கொள்வதே சாலப் பொருந்தும். அச்சொல்லுக்குரிய இயற்கைப் பொருளும் அதுவே, தமக்கென ஒரு வருவாயும் தேடாமல், பிறர் நலத்திற்கே பாடுபடும் துறவிகளுக்கு உணவு, உடை முதலியனவற்றை இல்லறத்தான்தானே கொடுக்க வேண்டும். இன்னும், கண், கால், முதலிய உறுப்புக் குறைந்தவராகித் தொழில் செய்ய முடியாமல் பிச்சை எடுப்போரைத், துவ்வாதவர் என்பதனுள் அடக்க வேண்டும்.

ஐம்புலத்து ஆறு
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றால்
ஜேகம்புலத்தா றோம்பல் தலை.

(பதவுரை) ஆங்கு-~- அவ்வில் வாழ்க்கையில், தென் புலத்தார் --- (இறந்துபோய்த்) தென் திசையில் இருப்பவராகக்