பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆணிமுத்துகள்
49
 


பெற்றிருப்பது இந்தக் காலம்: கட்டுசோற்று மூட்டை கரைந்த பின்பு, ஊர்க்குள் புகுந்து ஊராரின் உதவி பெற்றது அந்தக்காலம். எனவே, இல்லறத்தான் விருந்தோம்ப வேண்டும் என்று அந்தக் காலத்தில் வள்ளுவர் வற்புறுத்தியிருப்பது பொருத்தந்தானே! எல்லாம் வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்திலும் இவ்விருந்தோம்பல் தேவைப்படுகின்றதென்றால் மேலும் கூறுவானேன்?

எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்க்கே (எள் + நெய்) எண்ணெய் என்று பெயர்; அந்தப் பெயர், பின்பு தன்னோடு ஓரளவு ஒப்புமை உடைய ஏனைய எண்ணெய்களுக்கும் வழங்கப்பட்டதைப்போல, புதியோரைக் குறிக்கும் விருந்து என்னும் பெயர், பின்பு அவரைப்போல் வந்து போகும் உறவினர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது. எனவே, இதுகாறும் கூறியவற்றால், தம்மை நாடி வரும் புதிய விருந்தினரை ஓம்பவேண்டியது இல்லறத்தாருக்குரிய கடமைகளுள் ஒன்று என்பது உணரப் பெறும்.

ஒக்கல் என்றால் சுற்றத்தார்கள். இல்லறத்தான் தன்னைச் சேர்ந்த சுற்றத்தார்களையும் ஓம்பதேண்டும். ‘செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்கல்’ என்பது நாம் அறிந்ததுதானே?

முதல் குறளில் உள்ள ‘இயல்புடைய மூவர்’ என்பதற்கு, பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை என்னும் மூவகையினர் எனப் பொருள் உரைத்தேன் யான். ஏன்-அம்மூவரையும் இக்குறளில் உள்ள சுற்றத்தாருக்குள் அடக்கிவிடக்கூடாதா? என்ற வினா எழலாம். ஈண்டு அடக்க முடியாது. ஏன்?

ஒருவன் தன் பெற்றோர், மனைவி, மக்கள் எனும் மூவகையாரோடு கொள்ளும் தொடர்புக்கும், ஏனைய