பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

53


(பதவுரை) பெண் தகை = (உருவத்தால்) பெண் தன்மை பெற்றுள்ள, பேதைக்கு = இந்தப் பேதைப் பெண்ணுக்கு, கண் = கண்களானவை, கண்டார் = பார்த்தவரது, உயிர் உண்ணும் தோற்றத்தால் = உயிரைத் தொலைக்கும் பார்வையைப் பெற்றிருப்பதால், அமர்த்தன = (கண்ணுக்கு இருக்க வேண்டிய தன்மையின்றி) எதிர்மாறாய் உள்ளன, (தோற்றம் = பார்வை; பெண்டகை - பெண் தகை = பெண் தன்மை; பேதை = அறியாத இளம் பேதைப் பெண்; அமர்த்தல் - மாறுபடுதல், அமர்த்தன - மாறுபாடாயுள்ளன.)

(மணக்குடவர் உரை) தம்மைக் கண்டவர்கள் உயிரை யுண்ணும் தோற்றத்தாலே, பெண் தகைமையையுடைய பேதைக் கொத்தன கண்கள்,

(பரிமேலழகர் உரை) பெண்டகையை யுடையவிப் பேதைக்கு உளவாய கண்கள், தம்மைக்கண்டா ருயிருண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்ந்திருந்தன.

{ஆராய்ச்சி விரிவுரை) உயிர் உண்ணல் என்றால் உயிரைப் போக்குதல்--- தொலைத்தல். இந்தப் பொருள் எந்த அகராதியில் உள்ளது? வேண்டியதில்லை - பணம் போட்டு வாங்கிய எந்த அகராதியும் இங்கு வேண்டியதில்லை. மக்கள் அகராதியில் இதனைக் காணலாம்; அதாவது, மக்களது பேச்சு வழக்கில் இதனைக் காணலாம். ஒருவன் ஒரு பொருளைத் தொலைத்துவிட்டால், "அதைத் தொலைச்சு வாயில் போட்டுக்கொண்டாயா" என்று பெரியவர்கள் அவனைக் கண்டிப்பதை நாம் அறிவோம். வாயில் போட்டுக் கொள்ளலும் உண்ணலும் ஒன்று தானே! இன்னும் சிலர் தம் எதிரியைக் குறிப்பிட்டு, "அவன் என்னை என்ன செய்து விடுவான்? சாப்பிட்டு விடுவானோ?" அப்படியே எடுத்து விழுங்கி விடுவானோ? என்று காய்வதும் உண்டல்லவா? எனவே, உண்ணல், வாயில் போட்டுக்