பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

ஆழ்கடலில்


உரைத்துள்ளார். படை கொண்டு தாக்குங்காலும், படை உடம்போடு தொடர்பு கொண்டால் தான் உயிர் போகும்; எமன் உயிரைப் பிடிக்க வந்தாலும், அருகே வந்து ஏதோ (பாசக்) கயிற்றை வீசி எறிந்து கட்டியிழுப்பதாகக் கதையளப்பது வழக்கம். ஆனால் இவள் கண் பார்வையோ படையையும் எமனையும் மிஞ்சிவிட்டது. அருகே வராமலேயே, உடம்போடு தொடர்பு கொள்ளாமலேயே. தொலைவிலே இருக்கும்போதே, கண்ணால் பார்த்த அளவிலேயே உயிரைக் கொல்லுகிறதே! என்ன கொடுமை! எவ்வளவு கொடுமை! இதைத்தான் "கண்டார் உயிர் உண்ணும் தோற்றம்" என்று கற்பனை செய்தார் ஆசிரியர். என்ன அழகு! என்ன அழகு! அணுவுக்குள் ஆழ்கடல் என்பது திருக்குறளுக்கு முழுக்க முழுக்கப் பொருந்தும்!

கூற்றமோ கண்ணோ பிணையோ

(தெளிவுரை) இப்பெண்ணின் கண் நோக்கு, கூற்றுவனது கொலைத்தொழில் உடையதா? அல்லது, கண்ணுக்குரிய கண்ணோட்டம் பெற்றதா? அல்லது, மானினது மருண்ட பார்வை உடையதா? என்று கேட்டால், இம்மூன்று தன்மைகளையுமே கலந்து பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

"கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்று முடைத்து"

(பதவுரை) மடவரல் நோக்கம் = இந்த இளம் பெண்ணின் கண்பார்வை, கூற்றமோ = (என்னைக் கொல்வது போல் பார்ப்பதால்) எமப் பார்வையோ? கண்ணோ = (ஒவ்வொரு நேரம் என்னை உள்ளன்போடு பார்ப்பதுபோல் தெரிவதால்) உண்மையான கண்பார்வைதானோ? அல்லது. பிணையோ = (சில நேரம் மருண்டு மருண்டு மிரண்டு) மிரண்டு பார்ப்பதால்) பெண்மானின் பார்வைதானோ? இல்லையில்லை) இம்