பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

ஆழ்கடலில்


"அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு"

(பதவுரை) அறன் இழுக்காது = அறநெறி தவறாமல், அல்லவை நீக்கி = நல்ல செயல்களல்லாத தீய செயல்களைப் போக்கி, மறன் இழுக்கா (த) = வீரத்துக்குப் பழுதில்லாத, மானம் உடையது அரசு = மானம் உடையவனே அரசன். (அறன் - அறம்; இழுக்குதல் - தவறுதல் - வழுவுதல்; அல்லவை -- தீயவை; மறன் - மறம் - வீரம்.)

(மணக்குடவர் உரை) அறத்திற்றப்பாம லொழுகி, அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து, மறத்திற்றப்பாத மானத்தை யுடையவன் அரசன்.

[பரிமேலழகர் உரை] தனக்கோதிய அறத்தின் வழுவாதொழுகி, அறனல்லவை தன்னாட்டின் கண்ணும் நிகழாமற் கடிந்து . வீரத்தின் வழுவாத தாழ்வின்மையினையுடையான் அரசன்.

[விரிவுரை! இக்குறளில் மிக மிக நுணுக்கமானதொரு பொருள் பொதிந்து கிடக்கின்றது . அதனைப் பழைய உரையாசிரியர் எவரும் உணர்ந்தாரிலர், அவரெல்லோரும், அறனிழுக்காதிருப்பதைத் தனி ஒன்றாகவும், அல்லவை நீக்குதலைத் தனி ஒன்றாகவும், மறனிழுக்கா மானம் உடைமையைத் தனி ஒன்றாகவும் பிரித்து வைத்துப் பேசியிருக்கின்றனர். 'மூன்று நிலையும் அமைந்திருப்பதே மானம் உடைமையாகும்' என்றே வள்ளுவர் கூறியுள்ளார் என நான் சொல்லுகிறேன். இதனை இன்னுஞ் சிறிது விளங்க நோக்குவாம்: