பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

65கொண்டு போய்விட்டதால், அம் முதுகுப் புண்ணுக்கு நாணி, பெருஞ்சேரலாதன் என்னும் சேரமன்னன் உண்ணா நோன்புற்று உயிர் விட்டான். இன்னும் என்ன சொல்ல வேண்டும்?

அறத்துப்பால்


இல்லறவியல் - இல்வாழ்க்கை

வழி எஞ்சல் இல்

“பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.”

(பதவுரை) வாழ்க்கை = (ஒருவனுடைய) இல்வாழ்க்கையானது, பழி அஞ்சி = (பொருள் தேடுதல் முதலியவற்றில் உண்டாகும்) பழிக்கு அச்சப்பட்டு, பாத்து = (அப்படி நல்ல வழியில் வந்த செல்வப்பயனைப் பலர்க்கும்) பகுத்துக் கொடுத்து, ஊண் = (தானும்) உண்ணுதலை, உடைத்தாயின் = உடையதாக இருக்குமேயானால், வழி = (அந்நல்வாழ்க்கையின்) தொடர்ச்சி, எஞ்சல் = அற்றுப் போதல், எஞ்ஞான்றும் இல் = எப்பொழுதும் இல்லை. (பாத்தல் = பகுத்தல்; எஞ்சுதல் = அற்றொழிதல்)

(மண-உரை) இல்வாழ்க்கையாகிய நிலை பழியையும் அஞ்சிப் பகுத்துண்டலையும் உடைத்தாயின், தனதொழுங்கு இடையறுதல் எக்காலத்தினும் இல்லை.

(பரி-உரை) பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி அப்பொருளை இயல்புடைய மூவர் முதலாயினார்க்கும் தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான்