பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

71


(பதவுரை) கொடும் புருவம் = ( இவளுடைய கொடிய) வளைந்த புருவங்கள், கோடா (து) = அவ்வாறு வளையாமல், மறைப்பின் = (கண்களின் நேர் குறுக்கே சென்று திறக்க முடியாதபடி) மறைத்திருக்குமாயின், இவள் கண் = இவளுடைய கண்கள், நடுங்கு அஞர் - நடுங்கக்கூடிய துன்பத்தை, செய்யலமன் = உண்டாக்கியிருக்கமாட்டா; அவ்வாறு அந்தப் புருவங்கள் மறைக்காமையினாலேயே இவள் கண்கள் என்னைத் துன்புறுத்துகின்றன.

கொடுமை = கொடிய பொல்லாத தன்மை, வளைவு; கோடுதல் . கோணுதல் - கோடாது = கோணாது - வளையாது; அஞர் = துன்பம். மன்=சொல்லாது ஒழிந்த "ஒழி யிசை"ப் பொருள் தருவதோர் இடைச்சொல்.

(மணக்குடவர் உரை) வளைந்த புருவங்கள் தாம் செப்ப முடையனவாய் விலக்கினவாயின், இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா.

(பரிமேலழகர் உரை) பிரியா நட்பாய கொடும் புருவங் கடாஞ் செப்ப முடையவாய் விலக்கினவாயின், அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்குந் துயரைச் செய்ய மாட்டா.

(ஆராய்ச்சி விரிவுரை) இந்தக் குறளில், உயர்ந்த சொல் நயங்களையும் பொருள் நயங்களையும் உலகப் பெரும் புலவனாம் வள்ளுவன் வாரி வாரிக் கொட்டியிருக்கிறான் - ஆமாம், வாரி வாரிக் கொட்டியிருக்கிறான்! அவற்றை நாம் அள்ளிக் கொள்ளுவோமா? தலைமகளின் கண்வலையில் சிக்கித் தவிக்கும் தலைமகன், அவள் கண்ணின் மேல்புறத்துள்ள புருவத்தைக் காய்கிறான். புருவம் கண்ணுக்குத் துணை செய்கிறதாம். அழகாய் அமைந்ததும் மேலே மை. பூசப்பட்டதுமான, புருவத்தின் தோற்றப் பொலிவு