பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

77


காத்து, எல்லோருக்கும் கிடைக்கும்படிப் பகுத்து அளிக்க வல்லவனே அரசனாவான்.

"இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு"

(பதவுரை) இயற்றலும் - (பொருள் வரும் வழிகளைத் தேடி யாராய்ந்து திட்டமிட்டுச்) செயலாற்றுதலும், ஈட்டலும் = (அவ்வாறு செயலாற்றி) நிரம்பச் சேர்த்துத் தொகுத்தலும், காத்தலும் - (தொகுத்த பொருளைச் சிதறாமல் அழியாமல் காப்பாற்றுதலும், காத்த வகுத்தலும் - அவ்வாறு காப்பாற்றிய பொருளை எல்லோர்க்கும் உதவும்படிப் பகிர்ந்து அளித்தலும், வல்லது அரசு = {ஆகியவற்றில் எல்லாம் வல்லமை உடையவனே அரசன் (வல்லது அரசு = வல்லவன் அரசன்.)

(மணக்குடவர் உரை) பொருள் வரும் வழியியற்றலும், அதனை அழியாம லீட்டலும், அதனைச் சோர்வு படாமற் காத்தலும், காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான்).

(பரிமேலழகர் உரை) தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேலுளவாக்கலும், அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமற் காத்தலும், காத்தவற்றை அறம் பொருளின் பங்களின் பொருட்டு விடுத்தலும் வல்லவனே அரசன்.

(விரிவுரை) இந்தப் பகுதியை அரசியலிலே ஓர் 'உயிர் நாடி' எனலாம். அரசனுக்கு எந்தத் திறமை இருந்தாலும் இல்லாவிடினும், முதலில் இந்தத் திறமை இருந்தாக வேண்டுமல்லவா? இந்தத் திறமையை உரைகல்லாக வைத்தே அரசாங்கத்தின் தகுதி உரைத்துப் பார்க்கப்படுவதை இக்காலத்தில் செய்தித்தாள் படிப்பவர் -- அரசியல்