பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

81


அரசன் இல்லாத எதிர்காலத்துக்கும் இடம்வைத்து, வல்லது அரசு - அதாவது வன்மையுடையதே அரசாங்கம் என அஃறிணை முடியில் அமைத்துப் போந்துள்ள ஆசிரியரின் ஆற்றலை ஓர்ந்துணர்க!

மீக்கூறும் மன்னன் நிலம்

(தெளிவுரை) வந்து காண்பவரிடம் எளிமையாய்ப் பழகி, கடுஞ்சொல்லின்றி ஆவன புரியும் அரசனது நாடு மேலானதாக மதிக்கப்படும்.

"காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறும் மன்ன னிலம்"

(பதவுரை) காட்சிக்கு எளியன் = தன்னைக் காண வருவோர்க்கு எளிதில் காட்சி கொடுத்து எளிமையாய்ப் பழகுபவனாயும், கடுஞ்சொல்லன் அல்லனேல் = கடுஞ்சொல் பேசாதவனாயும் ஒர் அரசன் இருப்பானேயானால், மன்னன் = அம்மன்னனை, நிலம் = உலகமானது, மீக்கூறும்= மேலாக மதிக்கும். (மீ = மேன்மை; மீக்கூறுதல் = மேலாக மதித்துக் கூறுதல்).

(மணக்குடவர் உரை) காண்கைக்கு எளியனாய்க் கடுஞ் சொற் கூறுதலும் அல்லனாயின், அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்.

(பரிமேலழகர் உரை) முறை வேண்டினார்க்குங் குறை வேண்டினார்க்குங் காண்டற் கெளியனாய், யாவர்மாட்டும் கடுஞ்சொல்ல னல்லனுமாயின், அம்மன்னனது நிலத்தை எல்லா நிலங்களினும் உயர்த்துக் கூறும் உலகம்.

(விரிவுரை) 'மீக்கூறும் மன்னன் நிலம்' என்னுந் தொடருக்குப் பலவிதமாகப் பொருள் கூறலாம். மன்னனை இந்நிலவுலகம் மேலாக மதிக்கும் எனவும், மன்னன் உலகில்