பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

ஆழ்கடலில்


எனவே, பழைய உரையாசிரியர்கள் கூறியுள்ள இந்தப் புரட்சியான கருத்து நன்றாய்த்தான் உள்ளது. வள்ளுவரே பின்வரப்போகும் ஒரு குறளில் இந்தப் புரட்சியைக் கையாண்டுள்ளார். அந்தப் புரட்சியின் அனல் இங்கேயும் வீச, உரையாசிரியர்கள் இங்கேயே குளிர்காயத் தொடங்கிவிட்டனர். ஆயினும், இந்தப் பொருளுக்கு இந்தக் குறள் அமைப்பு இடம் தரவில்லை என்றே உணர்கிறேன். அறத்தாறு என்று சொல்லி, பின் புறத்தாறு என்றால், அது அறநெறிக்குப் புறம்பான மறநெறிதான். புறவாழ்க்கை என்று சொல்லியிருப்பின், இல்வாழ்க்கைக்குப் புறம்பான துறவு வாழ்க்கை எனப் பொருள் கொள்ளலாம். அவ்வாறு இல்லையாதலின், பழைய உரை பொருந்தாது என்பது இப்போது புரிகிறது. 'பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவ' என்னும் கொள்கையைப் பின்பற்றி யான் இக்குறளுக்கு உரை எழுதியிருக்கும் நுணுக்கத்தை இலக்கணம் கற்றோர் உணர்வர். தீயன கண்டிப்பதற்கும் இடம் இது.

இந்தக் குறளில் 'போஒய்' என ஒரு சொல் உள்ளது. இதன் உண்மையான உருவம் 'போய்' என்பதுதான். இதன் நடுவே 'ஒ' என்னும் ஓர் எழுத்து சேர்ந்துள்ளது. இந்த எழுத்துக்கும் இங்கே தனி ஒலி இல்லை. 'போ' என்பதை நீட்டிச் சொல்லும்போதே 'ஒ' என்பதற்கும் சேர்த்து நீட்டிவிட வேண்டும். 'போ-ஒய்' எனப் பிரித்துப் படிக்காமல், 'போஒய்' என ஒரே நீட்டாய் நீட்டிச் சொல்லி விட வேண்டும், 'போ' என்பதில் உள்ள (ப் + ஒ) உயிர் எழுத்தின் அளவை மிகுதியாக எடுத்து ஒலிப்பதற்கு அறிகுறியாக 'ஒ' என்பது சேர்க்கப்பட்டது. ஆதலின், இதனை இலக்கணத்தில் 'உயிர் அளபெடை' என்பர், இங்கே இந்த உயிர் அளபெடை இடம் அடைப்பதற்காகக் கையாளப்பட்டது . என்பது இலக்கண நூலாரின் கருத்து. இதை நான் ஒத்துக் கொள்வதில்லை. இடம் அடைப்பதற்கு வள்ளுவர்க்கு வேறு சொல் கிடைக்காதா? எனவே, ஒரு