பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிர மாலை கவிஞர் நாரா. நாச்சியப்பன், (நாவல் ஆர்ட்ஸ் பிரிண்டர்ஸ், 137. ஜானிஜான்கான் சாலை, சென்னை-60004) அண்ணலை மேக வண்ணன் ஆகிய பெருமாள் தன்னை எண்ணியே நாளும் நெஞ்சில் இருத்தியே அன்பில் ஆழ்ந்து தண்ணியே நின்ற தாலே நலமுற ஆழ்வார் என்று திண்ணமாய்ப் போற்றப் பெற்றார் செல்வர்பன் னிருவர் தாமே! துன்பங்கள் சூழ்ந்த போதும் துயரிலே ஆழ்ந்த போதும் அன்பிலே தாழ்ந்த தில்லை அரவணை யானைப் போற்றும் இன்பமே இன்ப மென்றே இணையிலா வாழ்வு கண்டு மன்பதைக் கெடுத்துக் காட்டாம் வாழ்த்தவர் ஆழ்வார் ஆவார்!