பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணர்குல விளக்கு 59 பத்துப் பாசுரங்கள் கொண்ட அமலனாதிபிரான்" என்ற திவ்வியப் பிரபந்தத்தை அருளிச் செய்தார், அதன் இறுதியில், அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக் கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று தம் துணிவினை வெளியிட்டு உலகத்தாரை வாழ்வித். தருளினார். பத்துப் பாசுரங்களையும் பாடிப் பரவி உகப் போடு நிற்கையில் பெரிய பெருமாளும் அவரை அங்கீகரிக்க அவரும் அனைவரும் காண அப்பிரானது திருவடிகளில் கலந்து மறைந்து இரும்புண்ட நீராயினார். கோபாலன் குழல் இசையால் கோக்களை மகிழ்வித்தது. போல் அந்தக் கோவிந்தனை யாழிசையால் மகிழ்வித்த இந்த ஆழ்வார் இவ்வுலகில் நடையாடின காலம் ஐம்பது ஆண்டு. இவர் திருநட்சத்திரம் கார்த்திகை.உரோகிணி. கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் என்று காசினியீர்! வாய்ந்த புகழ்பாணர் வந்துதிப்பால் - ஆத்தியர்கள் அன்புடனே தானமல னாதிபிரான் கற்றதற்பின் கன்குடனே கொண்டாடும் நாள், 41 9. அமலனாதிபிரான் - இப்பிரபந்தம் அமலனாதி பிரான் என்று தொடங்குகின்றது. பிரபந்தமும் அமல னாதிபிரான் என்று திருநாமம் பெற்றது. இது முதற் குறிப்பு: என்ற இலக்கணத்தால் பெற்ற பெயராகும்-திருப் பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு என்பனபோல. 10. இராகவையங்கார், மு. ஆழ்வார்கள் காலநிலை. பக். 150. 11. உ. ர. மா. 10.