பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

ஆழ்வார்களின் ஆரா அமுது


என்பது தத்துவம், இங்கனம் அவர் இவனுடைய குற்றங் களைப் பகவானிடம் எடுத்துரைக்கவே மாட்டார் என்பது உண்மை, ஆயினும், ஈசுவரன் மனத்தில் இவனை ஏற்றுக் கொள்ளும் எண்ணத்தை ஊன்றுவிப்பதற்காக, ஒருகால் சில குற்றங்களை எடுத்துரைத்தல் கூடும்; இங்ங்ணம் குற்றங்களை எடுத்துக் கூதும் முறையில் பிராட்டியார் சேததனைக் கைவிடுவராகின்றார். இந்தச் சேதநனிடம் ஊன்றிய அன்பு கொண்ட பகவான், தனக்குள்ள வாத் சல்யம் முதலிய திருக்குணங்களால், என்னடியார் அதுசெய்யார் செய்தனரேல் கன்றுசெய்தார் 8 என அவரை அங்கீகரிக்க முன்வந்து நிற்பன். இத்தகைய எம்பெருமானும் ஒருகால் கைவிடுவதுமுண்டு. இங்ங்ணம் சேதநனுக்கு நன்மை புரிபவராகிய இருவரும் கைவிடினும், தம் சேதநனைத் தம் அழகினால் அப்புறம் செல்லாதவாறு அகப்படுத்திக் கொள்ளும் அவன் திருவடிகளோ, அவனை விடாது பற்றிக் கொள்ளும் திண்மை வாய்ந்தனவாக இருக்கும். இதனை மனத்திற் கொண்டே நம்மாழ்வாரும், வண்புகழ் காரணன் திண்கழல் சேரே. 17 எனக் கூறிச் சென்றார். இரண்டாவது வாக்கியம்,

  • சேவியக்கல் சேஷபூதன் இழியுங்

துறை, ப்ரஜை முலையிலே வாய் வைக்குமாப் போலே 18 சேவுதி - தலைவன் சேஷபூதன். சேதநன்; இழிதல் . சார்தல்; ப்ரஜை - குழந்தை! 16. பெரியாழ். திரு. 4, 9 2. 17. திருவாய். 1. 2: 10 18. முமுட்சு - 147,