பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாணர்குல விளக்கு 63. என்பது. பாலுண்ணும் பச்சைக்குழவி தாயின் மற்றைய அவயவங்கள் யாவையும் விட்டு, எங்கனம் தான் உயிர் வாழ்தற்கிடனாய் உள்ள அவள் கொங்கையில் வாய் வைக் கின்றதோ, அங்ங்னமே, சேவியாகிய ஈசுவரனைப் பற்றப் புகும் சேதநனும் எம்பெருமானுடைய பல உறுப்புகளையும் விட்டுத் தான் உய்வதற்கு இடனாய் உள்ள அவன் திருவடி களையே பற்றுகின்றான். முந்திய செயல் குழந்தைக்கு இயல்பாமாறு போல, பிந்திய செயல் சேதநன் சொரூபத் திற்கு இயல்பாய் அமைந்ததாகும். இவற்றால் வைணவர் கட்கு எம்பெருமானின் திருவடிப் பேறே அடையத்தக்க குறிக்கோள் பொருள் என்பது ஈண்டு அறியத்தக்கது. இரண்டாவது பாசுரத்தில் சிவந்த ஆடையின் மேலே சென்றதாம் என் சிந்தனையே’ என்கின்றார். முதல் பாசுரத்தில் கமலபாதம்’ என்பதும், இப்பாசுரத்தில் :சென்றதாம் என் சிந்தனை என்பதையும் நாம் நன்கு கவனிக்க வேண்டும். முதலில் எம்பெருமான் ஆழ்வாரை அடிமை கொள்ள மேல் விழுந்த நிலையும், பிறகு ஆழ்வார் சுவை கண்டு தாம் எம்பெருமான் மேல் விழுகின்ற நிலையும் தோற்றுவதைக் கண்டு மகிழலாம். புதிதாக ஈன்ற பசு முலைச் சுவை அறியாத தன் கன்றுக்கு முதலில் தன் முலையை அதன் வாயில் கொடுக்கும்; பின்பு சுவடறிந்தால் பசு உதைத்துக் கொண்டாலும் கன்று தானே அதன் மேல் விழும். அங்ங்ணமே, திருவடிகள் தாமே வந்து போக்கிய மாணவாறு கூறினார் முதற் பாசுரத்தில்; இதில், தம் முடைய நெஞ்சு சுவடறிந்து மேல் விழுமாறு கூறுகின்றார் என்பதை அநுபவித்து மகிழ வேண்டும். ஆடையின் அழகை அது சந்தித்த ஆழ்வார் மூன்றாவது பாசுரத்தில் படைப்பிற்கெல்லாம் மூலகாரணமான உந்திக் கமலத்தைப் பாடி அநுபவிக்கின்றார். அக்தி போல்கிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்த ஓர்.எழில் உந்தி மேலன்றதோ அடியேன் உள்ளது இன்னுயிரே (3)