பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பது ஆழ்வாரின் அநுபவம். முந்தைய பாசுரத்தில் குறிப்பிட்ட சிவந்த ஆடை இப்பாசுரத்திலும் அந்தி போல் நிறத்து ஆடை என்று குறிப்பிடப் பெறுவதைக் காண்டல் வேண்டும். பீதக ஆடையின் அழகு படைப்பிற். கெல்லாம் மூலகாரனமாகிய உந்தியத் தாமரையின் அழகிலே உள்ளத்தைக் கொண்டு முட்டுகின்றது! பர ம பதத்திலே கைங்கரிய சாம்ராஜ்யத்துக்கு முடிசூடியிருக் கின்ற முத்தரும் நித்தியரும் தேசோசிதமான தேகங்களை ஏற்றுக் கொண்டு (பரிக்ரகித்துக் கொண்டு) திருமலையில் வந்து கைங்கரியங்கள் பண்ணுகின்றனர். வடவேங்கடமா மலை" என்ற தொடர் இதனைக் காட்டுகின்றது. அவற்றைப் பெறுதற்காக அங்கே நித்திய சந்நிதனா யிருக்கும் அரங்கநாதனுடைய திருப்பீதாம்பரத்திலும் திருதாபிகமலத்திலும் என் சிந்தை குடிகொண்டது" என்கின்றார் ஆழ்வார். வடவேங்கடமாமலை நின்றான் என்றவுடனே, "வருந்தி ஏற வேண்டும்படியான திருமலையும் நம் போன்ற வர்கட்குப் பரமபதம்போல் அரிதேயன்றோ?' என்று சிலருக்குத் தோற்றும். இதனைத் தெளிவுறுத்தவே உடனே அரங்கத்து அரவின் அணையான்' என்று குறிப்பிட்டு அவனுடைய எளிமையை (செளலப்பியத்தை) அருளிச் செய்கின்றார். *அந்திபோல் நிறம்" என்பதற்கு - அடியாருடைய அஞ்ஞான விருளைக் கழிக்கவல்ல நன் ஞான மாகின்ற சூர்யோதயத்துக்குக் கிழக்கு ஸந்த்யை போலவும், அவர்களுடைய தாபத்ரயத்தை ஆற்றுதற்கு மேற்கு எலந்த்யை போலவும் இரா நின்றது என்று கருத்துரைப்பர் துப்புற்பிள்ளை. முதற்பாசுரத்தில் அமலன் ஆதி பிரான்" என்பதிலுள்ள ஆதி என்ற அடைமொழியால் எம்பெருமா னுக்குச் சொன்ன ஜகத்காரணத்துவத்தை இப்பாசுரத் திலுள்ள அயனைப் படைத்தது ஒர் எழில்" என்ற மூன்றாம். அடியிலுள்ள பகுதி நிலைநாட்டுவதையும் கண்டு மகிழலாம்.