பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணர்குல விளக்கு 65 திருவுந்தியின் அழகை அதுபவித்துக் கொண்டிருக்கும் போதே எம்பெருமானின் உதரபந்தத்தின்மீது ஆழ்வாரின் கண்கள் தாவுகின்றன. மதுரமா வண்டு பாட மாமயில் ஆடரங்கத்(து) அம்மான் திருவயிற்(று) உதரபந்தம்என் உள்ளத்துள் நின்(று) உலாகின்றதே (4) என்ற பாசுரத்தில் இதனைக் கண்ணுறலாம், திருவரங்கச் சோலையில் வண்டுகள் இனிமையாக இசை பாடுகின்றன; அதற்கேற்பச் சிறந்த மயில்கள் களிப்புடன் கூத்தாடு கின்றன. இந்தப் பசுஞ்சோலையில் கடல் வண்ணனாகக் காட்சியளித்து அடியவர்களின் சிரமத்தைப் போக்கும் எம்பெருமானின் உதரபந்தம் (Waist girdle) என்ற அரைக்கச்சு ஆழ்வாரின் நெஞ்சில் நின்று உலவத் தொடங்கு கின்றது. இந்தத் திருமேனி அழகில் இராமனாக அவதரித்து இராவண வதம் செய்தபோது ஏற்பட்ட வீரப் பொலிவும் கலந்து காணப்பெறுகின்றதைக் குறிப்பிடு கின்றார் ஆழ்வார். இப்பாசுரத்தின் முதல் இரண்டடிகளில் கபூரீவைகுண்டநாதன் பெரிய பெருமாள் ஆனவாறே, நித்திய சூரிகள்-வைகுந்தத்தில் இறைவனுடன் உறையும் விண்ணவர்கள் (Eternals) -வண்டுகளுடன் மாமயில்களும் ஆனபடி என்பது வியாக்கியானம், அடுத்து (ஐந்தாம் பாசுரத்தில்), அடியார்களைப் பரிந்து காத்தருள வல்ல பெரிய பிராட்டியாரும், 19. பெரிய பெருமாள் என்பது அரங்கநாதன், இவரைத் திருவரங்கத்தில் ஸ்தாபித்தது பெருமாள் (இராமன்). அரங்கநாதனைப் பெரிய பெருமாள்: என்பதும், இராமனைப் பெருமாள்' என்பதும், இலக்கு வனை இளைய பெருமாள் என்பதும் வைணவ மரபு, 5