பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஆழ்வார்களின் ஆரா அமுது


அனைத்தையும் காத்தளிக்க வல்ல பண்புக்கு அறிகுறியாக வுள்ள திருமாலையும் திகழப் பெற்ற அப்பனின் திரு மார்பின் அழகு ஆழ்வாரை ஆட்கொள்ளுகின்றது. பாரமாய பழவினை பற்(று) அறுத்(து) என்னைத்தன் வாரமாக்கி வைத்தான் வைத்தது அன்றி என்னுள் புகுந்தான் கோரமாதவம் செய்தனன்கொல் அறியேன் அரங் கத்தம்மான் (திரு) ஆர மார்டிஅது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே (8) |பாரமாய பழவினை.பொறுக்க முடியாத சுமையாக வுள்ள நெடுங்காலவினைகள்; பற்று-சம்பந்தம்; வாரம்.அன்பு) என்பது பாசுரம். இதில் இறைவன் தம்முள் புகுந்து நிற்கும் நிலையில் ஒன்றுபட்டுப் பேசுகின்றார் ஆழ்வார். இறையருள் தம்மீது வெள்ளம் கோத்துப் பாய்ந்து தமது (1) பாரமான பழவினைகளைப் (சஞ்சித கர்மங்களை)29 பற்றறுத்தது; (2) இவரைத் தம்பால் அன்பாக்கிக் கொண்டது; (3) இந்த நன்மைகளுக்கு மேலாக இவருள்ளம் புகுந்தது என்று மூன்று வகைகளில் துணை செய்துள்ளது என்பவற்றைக் 20. வினை அல்லது கன்மம் மூன்று வகைப்படும். ஆகாமியம் (எதிர்வினை, வருவினை, மேல்வினை) இப் பிறப்பில் செய்யப்பெறுவது. சஞ்சிதம் (பழவினை, தொல்வினை, கிடைவினை) பல பிறப்புகளில் செய்யப் பெற்றுக் குவிந்த திரள். பிராரத்தம் (ஊழ்வினை, நுகர் வினை) ஒரு பிறப்புக்கென ஒதுக்கப்பெற்று உடலின்மூலம் அநுபவிப்பது.