பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


viii பொய்கையாழ்வார் : 3. தாமரைப் பூவில் தோன்றித் தமிழிலே நூறு பாட்டுக் காமுறும் வண்ணம் சொன்ன கவிஞரைப் பொய்கை யாழ்வார் ஆமெனச் சொல்லும் வையம் அவர்முதல் திருவந் தாதி தேன்மலர் மாலை போலும் திருச்சுடர் ஆழி யாற்கே! சங்கமே குழந்தை யாகித் திாமரைப் பொய்கைப் பூவில் தங்கியே பிறப்பெ டுத்துத் தமிழிலே பெருக்கெ டுத்து வங்கமே நிறையு மாறு வடித்தநற் சொல்லின் மாயை இங்கொரு திருவந் தாதி இணையிலாத் தெய்வப் பாட்டே! பூதத்தாழ்வார் : 5. மாதவிப் பூவில் தோன்றி மாநிலங் காப்பான் மீது காதலை வைத்தி ரண்டாம் கவினுறு திருவந் தாதி ஒதிய கவிஞர்; ஞான . ஒளிவிளக் கேற்றி வைத்தார் பூதத்தாழ் வாரே! கண்ணன் பொன்னடிக் காட்பட் டாரே! கார்நிறப் பெருமாள் கையின் கதையதே பிள்ளை யாதிச் சேர்ந்தது பூவில் என்று செப்புமோர் மரபுண் டர்மே!