பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாணர்குல விளக்கு 6? குறிப்பிடுகின்றார். காலம் உள்ளவரைப் பிராயச் சித்தம் பண்ணினாலும் கழிக்க வொண்ணாதபடி வளர்ந்து என் தொல்லைத் தீவினைகளை வாசனையோடு கூட வேரறுத்து அடியேனைக் குற்றமற்றவனாக்கித் (நிஷ்கல்மஷனாக்கி) தன்னிடத்தில் பட்சபாத முடையவனாக ஆக்கிக் கொண்ட தோடன்றி, இத்தனை காலமாய்ப் பாவங்களுக்கு இருப் பிடமாயிருந்த என் நெஞ்சை அப்பாவங்களை யோட்டி விட்டு தனக்கிருப்பிடமாக்கிக் கொண்டான் என்கின்றார் முன் இரண்டு அடிகளில். இந்த இடத்தில் நம்மாழ்வாரின், கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும் புல்லென் றொழிந்தனகொல் ஏ பாவம்-வெல்ல நெடியான் கிறங்களியான் உள்புகுந்து நீங்கான் அடியேன துள்ளத் தகம்.' என்று பாசுரம் அநுசந்திக்கத் தக்கது. பிராட்டியானவள் எம்பெருமானுடைய திருமார்பில் வந்து சேர்ந்து அகலகில் லேன் இறையும், அகலகில்லேன் இறையும்: என்று தானே எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது போலவே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து நான் இதனைவிட்டு நீங்கேன், நான் இதனை விட்டு நீங்கேன் என்று உருச் சொல்லிக் கொண்டு கிடக் இன்ற்ான் என்பது தோன்ற உள் புகுந்து நீங்கான்' என்று அருளிச் செய்த அழகு கண்டு அநுபவித்து மகிழத் தக்கது. தன் வீட்டைத் தான் ஆள வொண்ணாதபடி நெடுநா ளாக ஆக்கிரமித்துப் போந்த குறும்பர்களைச் சீற்றத்தோடு ஒட்டித் துரத்திவிட்டு மேனாணிப்புடன்-பெருமிதத்துடன் 21. பெரி. திருவந் -08