பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

ஆழ்வார்களின் ஆரா அமுது


- தன் வீட்டில் வருகை புரிந்த பேரரசன் போல, அடியே. னுடைய நெஞ்சை எம்பெருமான் தன்னதாக அபிமானித்து அரிய பெரிய காரியங்கள் செய்து வந்து புகும்படிக் கீடாக நான் எந்தப் பிறப்பில் என்ன தவம் பண்ணினேனோ? தெரியவில்லையே! என்று தடுமாறுகின்றார் மூன்றாம் அடியில். கோரமாதவம் செய்தனன் கொல்? என்றதால் இதனை அறியலாம். !! பெண்ணுலாஞ் சடையி னானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா ஊழி யூழி தவஞ்செய்தார் வெள்.கி நிற்ப?? என்ற தொண்டரடிப் பொடிகளின் வாக்கின்படி மெய்யே தவம் புரிந்த பெரியோர்களும் இப்பேறு பெறாமல் வருந்தி நிற்கின்றனர். அப்படியிருக்க, நான் நினைக்காததாக இப்பேறு வாய்த்தது தீவிரமானதோர் அரிய தவப்பலனாக இருக்கவேண்டும். இந்தத் தவமும் அடியேனது முயற்சி யினால் நிகழ்ந்ததல்ல; எம்பெருமானே இதற்கு நோன்பு நோற்றவனாக இருக்கவேண்டும்' என்று கருதுகின்றார். :பின்னையும் ஆற்றாமையாலே விடாய்த்தவன் - பெரிதும் களைப்புற்றவன் - தடாகத்தை நீக்கி உள்ளே முழுகுமாப் போலே, என் உள்ளம் புகுந்தான் என்பது வியாக்கினம். :புலன்களை வென்று கொடுந்தவம் புரிந்தோனோ? என்று எண்ணிப்பார்ப்பவர் அடியேன் அறிய ஒன்றும் இல்லையே!” என்று குறிப்பிடுகின்றார். மூன்றாம் அடியிலுள்ள செய்தனன் என்பதைத் தன்ம்ை வினைமுற்றாகக் கொள்ளாமல் படர்க்கை வினைமுற்றாகக் கொண்டு என்ன தவம் புரிந்தானோ? என்பதாக உரைத்தருளின துரப்புற். பிள்ளையின் வியாக்கியானமும் அநுபவித்து மகிழத்தக்கது. ஒர் அடியானைப் பெறுவதற்கு எம்பெருமான் படுகின்ற பாடு யார் அறிவார்? 22, திருமாலை . 44