பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணர்குல விளக்கு 69 பின்னர், பெரிய பெருமாளின் திருக்கழுத்தின் அழகு ஆழ்வாரின் அகக் கண்ணுக்கு இலக்காகின்றது. அண்ட ரண்ட பகிரண்டத்(து) ஒரு மாநிலம் எழுமால்வரை, முற்றும் உண்ட கண்டம் கண்டீர்! அடியேனை உய்யக் கொண்டதே (6) அண்டர் - தேவர்கள்; அண்டம் - உலகங்கள்; பகி ரண்டம் - அண்டங்கட்கு அப்பாலுள்ள உலகங்கள்: கண்டம் . திருக்கழுத்து: திருமார்பின் அழகு அண்டங்களையெல்லாம் திருவமுது செய்தருளின திருக்கழுத்தின் அழகிலே முட்டுகின்றது; இந்த அழகு தம்மை ஈடுபடுத்தியதாகப் பேசுகின்றார் பாணர் பெருமாள் இந்தப் பாசுரத்தில். காரணாவஸ்தையில் எல்லாக் காரியங்களையும் தன் பக்கவில் உபசம்ஹரித்துப் பின்பு சிருஷ்டிக்குமாறு, வெற்றிப்போர் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட' என்ற வாறு சகல பதார்த்தங்களையும் பிரளயப் பெரு வெள்ளத்தில் நின்றும் தப்ப வைத்துத் தன் திருவயிற்றில்ே அடக்கி நோக்கின. பெருநன்றியையும், இப்போதும் தம்மை சம்சாரசாகரம் விழுங்காதபடி ஆட்படுத்திக் கொண்ட உபகாராதிசயத்தையும் ஆனந்தமாகப் பேசுகின்றார் மேற்குறிப்பிட்ட இதே பாசுரப் பகுதியில். அடுத்து, அனைவருக்கும் பட்சபாதமின்றி அபயம் அளிக்கும் நீதிவானவனின் பவளவாயின் அழகு ஆழ்வாரை வசீகரிக்கின்றது. செய்யவாய் ஐயோ! என்னைச் சிந்தை கவாந்ததுவே: (7) என்கின்றார். எம்பெருமானை முற்றிலும் அநுபவிக்க வேண்டும் என்று பாரித்திருக்கையில் இடையிலே நெஞ்சைக் 23. பெரி. திரு. 11, 6:3