பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*} ஆழ்வார்களின் ஆரா அமுது கொள்ளை கொண்டு விட்டதே அதரம்! இதற்கு என் செய்வேன்? என்பார் ஐயோ!' என்கின்றார். திருவாழி திருச்சங்குகளை யுடையவனாய், திருத்துழாய் மாலை அணிந்த நீள் முடியினால் அலங்கரிக்கப் பெற்றவனாய், திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொள்ப வனாய், நம் போன்றவர்களும் ஊனக் கண்ணால் காணும் படியாகக் காட்சிதரும் பச்சைமாமலை போன்ற மேனியின் அழகிற்குத் தப்பமுடிந்தாலும், அடியார்களின் நலன்களை வினவத் துடித்துக் கொண்டிருக்கும் திருவாயின் அழகிற்குத் தப்ப முடியாது. ஐயோ! ' என்பதற்கு பண்டே பறி கொடுத்த என்னை அநியாயம் செய்வதே! என்று கூப்பிடு கின்றார்' என்பதும், கல்லை நீராக்கி, நீரையும் தானே கொண்டது' என்பதும் வியாக்கியானம் (பெரிய வாச்சான் பிள்ளை). ஐயோ! என்றது - ஆச்சரியத்தையாதல், அநுபவிக்க அரிதானபடியையாதல், அநுபவ ரசத்தையாதல் காட்டுகின்றது" என்பர் துப்புற்பிள்ளை. அனைத்திற்கும் மேலாக அரங்கத்து அமலனின் திருக் கண்கள் இவரைக் குளிர நோக்கி வசீகரிக்கின்றன. பலரும் "இவன் பேயன் என்று ஏசும்படியாக உன்மத்த நிலையை அடைந்து விட்டதாக அருளிச் செய்கின்றார். வாயால் சொல்ல முடியாததையும் பேசாத பேச்சாகக் கண்கள் உணரச் செய்து விடுகின்றனவாம். அந்தக் கண்களின் அதிகுத கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட,அப் பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே (8) என்ற அற்புதமான செந்தமிழாக வடிவங் கொண்டுள்ளது. இந்தப் பாசுரப் பகுதி. ஒதி ஒதி, உணர்ந்து உணர்ந்து, இன்புற்று அநுபவித்தால் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படித் தேனாக இனிக்கும். அந்தக் கண்களின் அழகு.