பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாணர்குல விளக்கு 73 என்று கம்பன் வாக்கால் இராமபிரானின் அழகாக வடிவங் கொள்ளுகின்றது, இங்ங்ணம் இறைவனது எழிலை அகக் கண்ணாலும், 4றக் கண்ணாலும் அதுபவித்த ஆழ்வார், கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன்அணி அரங்கன்னன் அமுதினைக் கண்ட கண்கள்மற்(று) ஒன்றினைக் காணாவே (10) என்று பாடி இப்பிரபந்தத்தைத் தலைக்கட்டுகின்றார். *கொண்டல் வண்ணன்' என்பதில் இந்த ஆழ்வாரின் தாபம் தீர, விடாய் தீர அருள் பொழிந்த குறிப்பினைக் காணலாம். பெரிய பெருமாளின் திருமேனியில் முன்பு வீரப்பொலிவு கண்ட ஆழ்வார் இப்போது வெண்ணெயையும் வெண்ணெய் போன்ற உள்ளங்களையும் களவாடிய கண்ணபிரானின் அழகுப் .ெ ப ா லி வி ைன அநுபவிக்கின்றார். உற்று நோக்கினால் வெண்ணெய் உண்ட திருப்பவளமாகக் காணப்படுகின்றது என்கின்றார். என்னைச் சிந்தை கவர்ந்த வாயில் இப்போது வெண்ணெய் மணக்கின்றது' என்பது குறிப்பு. கூரத்தாழ்வான் தன்னுடைய சுந்தர பாஹ-ஸ்வத்தில் பண்டு யசோதைப் பிராட்டி முத்தம் கொடுத்த சுவடு இன்னும் அழகரின் திவ்விய கன்னங்களில் திகழா நிற்கும் என்று அநுபவித்தாற்போல, இவரும் பண்டு கண்ணன் வெண்ணெய் உண்டமுடைநாற்றம் இன்றும் பெரியபெருமாள் திருப்பவளத்தில் கமழா நிற்பதாக அநுபவிக்கின்றார். அவருடைய உதட்டை முகர்ந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்கும் என்பது குறிப்பு.