பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணர்குல விளக்கு 75, பேர் சொல்லவும் கூசுகின்றார். பர, வியூகம், விபவம் மற்றுள்ள அர்ச்சாவதாரங்கள் ஒன்றையும் என் கண்கள் காணமாட்டா என்பது குறிப்பு. முதலாழ்வார் திருமழிசை யாழ்வார் இவர்களைத் தவிர, ஏனைய ஆழ்வார்கள் யாவரும் தம் பேரையும் ஊரையும் பாசுரக்கணக்கையும் பரக்கச் சொல்லிக் கொண்டாற் போலே இவர் ஒன்றையும் சொல்லிக் கொள்ளவில்லை. மற்றொன்றினைக் காணா" என்ற மற்றொன்றில் இவையும் அடங்கி விட்டன போலும்! * அல்லாதார் திருநாமப் பாட்டுப் போலே தம்மைச் சொல்லிற்றிலர்...... தாம் போகப்ரவணராய்த் தம்மை மறக்கையாலே. பலம் இங்கே சித்திக்கையாலே பலத்துக்குப் பலம் வேணுமோ என்று பலம் சொல்லிற்றிலர்' என்பது அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரின் வியாக்கியான சூக்தி. பாண்பெருமாள் பாடிய அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தில் முதல் ஒன்பது பாசுரங்கள் தம் அகக்கண் கொண்டு அருளியவை என்றும், பத்தாவது பாசுரம் புறக் கண்ணால் நேரில் கண்டு அருளியவை என்றும் கொள்வது மரபு. என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே! என்று இவர் பாடி முடித்ததும், அரங்கநகர் அப்பனாகிய பெரிய பெருமாள் இவரை அளவற்ற பெரு மகிழ்ச்சி நிலையில் அப்படியே அந்தத் திருமேனியுடன் ஏற்றுக் கொண்டானாம். ஆழ்வாரும் அனைவரும் காண அப்பிரானது திருவடிகளிலே காய்ந்த இரும்பு உண்ட நீராயினர். இங்ங்னம் இவர் பாடிய பாசுரங்கள் பத்தும் இவரது உருக்கமும் உண்மையுமான அடிமைத் திறத்தை விளக்க வல்லன. இராமநுசர் போன்ற மெய்ஞ்ஞானியரும், கம்பன் போன்ற பெருங்கவிஞர்களும் உச்சிமேல் கொள்ளத் தக்க சிறப்பு வாய்ந்தது இந்த ஆழ்வாரின் பிரபந்தம். முனி வாகனராய்ச் சென்று அணியரங்கமுடையானை அநுபவித்த